தமிழக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக தேர்தல்பிரசாரம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இருப்பினும், பல கட்சித் தொண்டர்கள், சுவர்களில் விளம்பரங்கள் எழுதுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது எனபிஸியாக இருக்கிறார்கள்.
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவர்கள் கண்ணில் படும்படியாக சுவரொட்டிகள் ஒட்டிவருகின்றனர் பல கட்சிகளின் தொண்டர்கள்.
சென்னையில் எங்கு நோக்கிலும் திமுக வின் உதயசூரியன், அதிமுக வின் இரட்டை இலை, மதிமுகவின் பம்பரம்,பாமக வின் மாம்பழம், தமாகா வின் சைக்கிள் சின்னங்களாகக் காட்சியளிக்கின்றன.
தங்கள் கட்சி சின்னங்களுக்குக் கீழே பொதுமக்களைக் கவரும் வகையில் நல்ல வாசகங்களையும் எழுதிவைத்துள்ளனர் சம்பந்தப்பட்ட கட்சி ஆதரவாளர்கள்.
சன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் திமுக தேர்தல் வாசகங்களை சுவர்களில்எழுதப்பட்டுள்ளது. நாங்கள் நல்லாட்சியைத் தர ரெடி, நீங்க ரெடியா? என்ற ரீதியில் வாசகங்கள் சுவர்களில்எழுதப்பட்டுள்ளன.
அதிமுக வினரோ, திமுக ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை. வீரப்பன் நாடகத்தில்என்ன நடக்கிறது என்ற வகையில் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.
சில கட்சித் தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைவர்களின் புகைப்படத்தை வரைந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள்கட்சியின் சின்னத்தை வரைந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்று தேர்தல்ஆணையம் உத்தரவு பிற்பித்தும் பல சுவர்களை சுவர் விளம்பரங்கள் அலங்கரிக்கின்றன என்றே கூறலாம்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications