ஆயுத ஊழல்: அரசு வழக்கறிஞரால் அரசுக்குப் பிரச்சனை
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக சிபிஐக்கான அரசு வழக்கறிஞர் அளித்த புகார் பற்றி விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.
சிபிஐ இயக்குநருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கோரிஉள்ளார் சிபிஐக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் திவாரி.
தெகல்கா டாட் காம் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒளிப்பதிவை ஆதாரமாக கொண்டு இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
பாதுகாப்புத்துறை ஆயுத பேரங்களில் ஊழல் நிலவுவதை தெகல்கா நிறுவனத்தின் வீடியோ ஆதாரங்கள் அம்பலப்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பை விலை பேசி உள்ளனர். இத்தகைய நபர்களை உடனடியாககைது செய்து விசாரிக்க வேண்டும்.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட ஆதாரங்களை இவர்கள் அழித்து விடக்கூடும் என தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார் திவாரி.
இதனிடையே, திவாரியின் புகாரை ஆதாரமாக கொண்டு முன்னாள் பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணணை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கோரி உள்ளார்.
நீதி விசாரணையை காரணம் காட்டி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கூடாது.
சமதா கட்சியின் முன்னாள் பொருளாளர் ஜெயின் ஆயுத பேரத்தில் பணம் கைமாறியதை ஒத்து கொண்டு உள்ளார்.
இதில் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளதால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
இக்குற்றச்சாட்டை மறுக்க விரும்பும் பா.ஜ.க. தலைவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் எனில் ஜெயின் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரலாம்என கூறினார் ரெட்டி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications