ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்தது இந்தியா

Subscribe to Oneindia Tamil

இந்தூர் (மத்தியபிரதேசம்):

இந்தூரில் நடந்த 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அகர்கர் மற்றும் ஹர்பஜனை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணியை 189 ரன்களுக்கு சுருட்டிய இந்தியஅணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் போட்டிதொடரின் 3வது ஆட்டம் இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தூர் மைதானத்தின் பிட்ச் சரியில்லாததால் அங்கு போட்டிகள் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புதியதாக பிட்ச் அமைக்கப்பட்ட பின்னர்நடைபெற்ற முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸி.அணி இந்தியாவை பேட்டிங்கிற்கு அழைத்தது.

வழக்கத்திற்கு மாறாக, ராகுல் திராவிட்டும், டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். திராவிட் 15 ரன்களில்ஆட்டமிழந்தாலும், டெண்டுல்கர் (139ரன்கள்), லட்சுமணன்(83 ரன்கள்) ஜோடி 2வது விக்கெட்டிற்கு 199 ரன்களை எடுத்தது.

இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பவுண்டரிகள் அடிக்க பாவம் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறிப் போய்விட்டனர்.

கோடை வெயிலின் உக்கிரம் வேறு ஆஸ்திரேலிய அணியினரை பாடாய் படுத்த இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் இந்தியா 350 ரன்களைகடந்து விடும் எனத் தோன்றியது.

ஆனால், லட்சுமணன் ரன் அவுட்டான பின் வந்த வீரர்கள் ஒருவரும் சரியாக ஆடாததால் இந்தியா 50 ஓவர்களில் 299 ரன்களை மட்டுமே எடுத்தது.

இன்றைய ஆட்டத்தில் தனது 28வது சதத்தை அடித்த சச்சின் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இன்றையஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போல், ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ராத் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது ஆஸி. வீரர் என்ற பெருமையைபெற்றார்.

ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வார்னே மற்றும் கிரெக் மெக்டர்மட் ஆகிய இருவர் மட்டுமே இச்சாதனையை புரிந்து இருந்தனர்.

300 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி வீறுநடை போடத் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. அதன் துவக்க ஜோடி டேமியன் மார்டின் -கில்கிறிஸ்ட் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் எடுத்த போது 17 ரன்கள் எடுத்து இருந்த மார்டின் ஆட்டம் இழந்தார்.

ஜாகிர்கானின் 6வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்த கில்கிறிஸ்ட்டின் அனல் பறக்கும் ஆட்டம் இந்திய அணிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது.

கங்குலி மற்றும் தாஹியா கருணையால் இருமுறை தப்பி பிழைத்த (கேட்ச் மிஸ்) கில்கிறிஸ்ட் 63 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன் பந்தில் வீழ்ந்தார்.

பின்னர் வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஹர்பஜன் மற்றும் அகர்கர் தாக்குதலில் நிலைகுலைந்ததால் 189 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது.

இந்தியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில்உள்ளது. அடுத்த போட்டி விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+