For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்தாயிரம் ரன்களை கடந்து சச்சின் உலக சாதனை

By Staff
Google Oneindia Tamil News

இந்தூர்(மத்தியபிரதேசம்):

ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்று வரும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 10000 ரன்களைகடந்தார் சச்சின் டெண்டுல்கர்.

266 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10000 ரன்களை எடுத்த சச்சின் இதுவரை 27 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கருக்கு கிடைத்தது. அவருக்குபின் அந்த சாதனை ரன்களை கடந்தவர் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர்.

தற்போது ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுத்து இருக்கும் சச்சின் கடந்த 1989ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது ஆட்டத்தைதுவக்கினார்.

12 ஆண்டுகளில் 10000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் சச்சின் ஒவ்வொரு 1000 ரன்களையும் கடந்து வந்த பாதை கீழே உள்ளது.

மேட்ச் ரன்கள் தேதி எதிரணி

36 1000 மார்ச், 7, 1992 ஜிம்பாப்வே

73 2000 ஏப்ரல் 13, 1994 யுனைடெட் அராப் எமிரேட்ஸ்

96 3000 ஏப்ரல் 9, 1995 இலங்கை

115 4000 ஏப்ரல், 9, 1996 தென்னாப்பிரிக்கா

141 5000 பிப்ரவரி 12 1997 தென்னாப்பிரிக்கா

176 6000 ஜனவரி 14, 1998 பாகிஸ்தான்

196 7000 ஜூலை 7, 1998, இலங்கை

217 8000 ஜுன் 8, 1999 பாகிஸ்தான்

242 9000 மார்ச், 19, 20000 தென்னாப்பிரிக்கா

266 10000 மார்ச் 31, 2001 ஆஸ்திரேலியா

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X