உதயநிதி ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மாஸ்டர் பிளான்.. கள ஆய்வு முடிவுக்கு முன்பே களத்தில் அதிரடி
சென்னை: தேர்தல் தோல்விக்குப் பின் திமுக தலைமையகம் இன்று பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது. கள ஆய்வு முடிவுகள் வருவதற்கு முன்னரே, கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்தகட்ட வியூகங்களை வகுக்க அண்ணா அறிவாலயத்தில் உதயநிதி ஸ்டாலின் தீவிர ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.. அந்தவகையில், இன்று அதாவது மே 23 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையுடன் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்விற்கு, இளைஞரணி செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த வாரமே அழைப்பு விடுத்திருந்தார்.

மாநிலம் முழுவதிலும் உள்ள இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்தச் சந்திப்பு, கழகத்தின் அடிமட்ட கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் விருதுநகர், கோவை மற்றும் திருவண்ணாமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான மண்டல மாநாடுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தோல்வி ஏன்
குறிப்பாக, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், தோல்விக்கான காரணங்களை ஆராய்தல் மற்றும் எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்தல் ஆகியவை இந்த ஆலோசனையின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் எனத் தெரிகிறது.
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள் மற்றும் கட்சியின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அதிரடி
கழகத்தின் கட்டமைப்பை புத்துயிர் பெறச் செய்யவும், இளைஞர்களைக் கட்சிப் பணியில் மேலும் தீவிரமாக ஈடுபடுத்தவும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். ஏற்கனவே இளைஞரணி மாநிலத்தின் மிக வலிமையான பிரிவாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு கட்சியின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிக்கும் வகையில் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த ஆலோசனைக் கூட்டம் திமுகவின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.. ஒரு பெரிய தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, கட்சித் தலைமை அதனை சோர்வாகக் கருதாமல், உடனடியாக நிர்வாக மட்டத்தில் சுயபரிசோதனை மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் இறங்கியிருப்பது அவர்களின் தொடர் அரசியல் போராட்ட குணத்தைக் காட்டுகிறது.
ஆதவ் அர்ஜுனா கிண்டல்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கட்சித் தலைவர் ஸ்டாலின் 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை ஏற்கனவே நியமித்துள்ளார். இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் தலா இரண்டு பேர் வீதம் நேரில் சென்று நேற்று முதல் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
திமுக வேட்பாளர்களின் குறைபாடுகள், உட்கட்சி பிரச்சினைகள், மக்கள் கருத்து, தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட 14 கேள்விகளின் அடிப்படையில் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். ஆய்வு நடைபெறும் போது மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் அல்லது தொகுதி பொறுப்பாளர்கள் யாரும் உடன் இருக்கக்கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கள ஆய்வு ரிப்போர்ட்
ஒவ்வொரு தொகுதி ஆய்வும் முடிந்ததும் அன்றே அறிக்கையாக தயாரித்து, குழு உறுப்பினர்கள் தனித்தனியாக சமர்ப்பிக்கின்றனர். இந்த முழு கள ஆய்வு அறிக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கட்சியில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு மற்றும் மாற்றங்கள் செய்யப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின
நேற்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக தலைவரும் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் ஏன் தோற்றோம் என ஆராய்வதற்கு 36 பேர் கொண்ட குழுவை அமர்த்தியிருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு ஏன் தோற்றோம் என தெரியவில்லை என்று கூறியிருந்தது திமுகவினரை எரிச்சலூட்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications