கருணாநிதி-திருநாவுக்கரசு திடீர் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை எம்.ஜி.ஆர் அதிமுக தலைவர் திருநாவுக்கரசு சனிக்கிழமை சந்தித்தார்.
தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சண்டையில் மதிமுகவை விரட்டி விட்ட கருணாநிதியை, திருநாவுக்கரசு சந்தித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
ஏனெனில், எம்.ஜி.ஆர்.அதிமுகவிற்கு 3 தொகுதிகளுக்கு மேல் இல்லை என திமுக கூறிவிட்டது. எனவே, அக்கூட்டணியில் இருந்து திருநாவுக்கரசு கட்சிவிலகும் என கருதப்பட்டது.
ஏற்கனவே, தொகுதிகளை ஒதுக்காததால் திமுக கூட்டணியில் இருந்து ஒதுங்கிவிட்டார் வாழப்பாடி ராமமூர்த்தி.
தொகுதிச் சண்டையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுகவுடன், வாழப்பாடி, திருநாவுக்கரசு இணைந்து 3வது அணி உருவாக வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு 3வது அணி உருவாகிவிடாமல் தடுக்க திருநாவுக்கரசை அழைத்து கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கருணாநிதியை சந்தித்த பின்நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசு,
எம்.ஜி.ஆர்.அதிமுகவிற்கு 3 தொகுதிகள் மட்டும் தருவதாக திமுக தலைவர் கூறியுள்ளார்.
அதிக தொகுதிகள் கேட்டு மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நட்த்துவோம். திமுக தலைமை அழைக்கும் போதெல்லாம் அவர்களை சந்திக்கதயாராக இருக்கிறோம் என்றார்.
கருணாநிதியை சந்தித்த திருநாவுக்கரசிடம் அதிக தொகுதிகள் தர திமுக ஒப்புக்கொண்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
மதிமுகவை திமுக கழற்றி விட்டாலும் மதிமுக சனிக்கிழமை இரவு தான் தங்களது நிலை என்ன என்று அறிவிக்கும்.
அவர்கள் தனித்து போட்டியிட முடிவு செய்தால், அந்த கட்சிக்கு ஒதுக்கிய 21 தொகுதிகளில் இருந்து திருநாவுக்கரசு கட்சிக்கும், வாழப்பாடி ராமமூர்த்திகட்சிக்கும் சில சீட்களை கூடுதலாக ஒதுக்கி அவர்களை திமுக அணியில் தக்க வைத்து கொள்வார் கருணாநிதி எனத் தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications