ம.தி.மு.கவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ம.தி.மு.கவுடன் இனி எந்தவிதமான உறவும் கிடையாது என தமிழக முதல்வரும்தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.

தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 21 இடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தது. ம.தி.மு.க.தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 43 தொகுதிகளின்பட்டியலை கொடுத்து அதிலிருந்து தங்களுக்கு 21 தொகுதிகலைள ஒதுக்குமாறுகேட்டுக் கொண்டனர்.

ஆனால் தி.மு.க. 18 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது மற்ற 3 தொகுதிகள் வேறுதோழமை கட்சிகளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக வேறு 3 தொகுதிகள்ஒதுக்குவதாக கூறியது. இதையடுத்து இரு கட்சிகளுக்குமிடையே விரிசல் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை கருணாநிதி ம.தி.மு.க. விரும்பினால் தே.ஜ. கூட்டணியயிலிருந்துவிலகி தனித்து போட்டியிடலாம் என கூறியிருந்தார்,

வெள்ளிக்கிழமை இரவு ம.தி.மு.கவுடன் இனி எந்த விதமான உறவும் கிடையாது.அவர்களுடன் சமரசமும் கிடையாது என அறிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்த முடிவு இருகட்சிகளின் நலத்தையும கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு.

தொகுதிகள் அடையாளம் காண்பது குறித்த விஷயத்தில் ம.தி.மு.க. உண்மைக்குபுறம்பான கருத்துக்களை கூறிவந்தது. இதை எவ்வாறு பொறுக்க முடியும்.

ம.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.கவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.கவுக்குஎதிரான கோஷங்களிலும் ஈடுபட்டனர். இதை ம.தி.மு.க. நிறுத்துமாறும் கூறவில்லை.கண்டிக்கவும் இல்லை.

மாறாக ம.தி.மு.க. தலைவர் ஒருவர் தொண்டர்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள் எனகூறினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்வது இரு கட்சியின் வெற்றியையுமேபாதிக்கும். அதை மனதில் கொண்டு மன வேதனையுடன் தான் இந்த முடிவைஎடுத்திருக்கிறேன்.

ம.தி.மு,க, இல்லாவிட்டாலும் தி.மு.க. வெற்றி பெறும். அவர்கள் 3வது அணிஅமைத்து போட்டியிட்டாலும் கூட தி.மு..க.தலைமையிலான அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாது.

த.ரா.கா. போன்ற கட்சிகள் வெளியேறியதும் எந்த பாதிப்பையும்ஏற்படுத்தாது.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தமுடிவையும் நான் எடுக்க மாட்டேன்.

ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகள் மற்ற கட்சிகளின் பலத்தை பொறுத்துஅவற்றுக்கு ஒதுக்கப்படும்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசும், புதிய தமிழக கட்சி தலைவர்ஏ.சி.சண்முகம் இருவரும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாககூறியுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+