நான் கட்சி மாற மாட்டேன் ... அமைச்சர் செல்வராஜ் சொல்கிறார்
சென்னை:
நான் கட்சி மாறி தி.மு.கவுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று சமயநல்லூர்எம்.எல்.ஏ. டாக்டர் செல்வராஜு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களின் தொகுதிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதியான இளையாங்குடி எம்.எல்.ஏவான தமிழ்க்குடிமகன்கட்சியை விட்டு விலகி விட்டார். மற்றொரு அமைச்சரான சமயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜுவும்அதிருப்தியுடன் உள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால் தான் கட்சி மாறப் போவதில்லை என்று செல்வராஜு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். செல்வராஜுஇதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை விவரம்:
கூட்டணி என்று வரும்போது சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய அவசியம்நேரிடலாம். அதுபோலவே, சமயநல்லூர் மற்றும் இளையாங்குடி தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளான புதியதமிழகம் மற்றும் மக்கள் தமிழ் தேசம் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் அதற்காக மனஸ்தாபம்கொண்டு கட்சி மாறும் துரோகத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
என்னிடமும், தமிழ்க்குடிமகனிடமும் வேறு தொகுதிகள் தருவதாக கருணாநிதி கூறியிருந்தார். ஆனால்அவசரப்பட்டு விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டார் தமிழ்க்குடிமகன். அத்தோடு, தொலைக்காட்சிக்குஅளித்த பேட்டியில் என் பெயரையும் தேவையில்லாமல் இழுத்துள்ளார்.
ஒரு கொள்கை உறுதி படைத்தவன் என்ற முறையில், சுயமரியாதை உள்ளவன் என்ற முறையில், கட்சி மாறும்துரோகத்தை நான் செய்ய மாட்டேன். தொடர்ந்து கருணாநிதி தலைமையில்தான் செயல்படுவேன் என்றுகூறியுள்ளார் செல்வராஜு.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications