செக் மோசடி: தராசு பத்திரிக்கை ஆசிரியருக்கு தண்டனை
கோவை:
செக் மோசடி வழக்கில் தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதம் விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், 8 லட்ச ரூபாய் பேப்பர் மில்லுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தராசு வார இதழின் ஆசிரியர் ஷ்யாம். இவர் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு பத்திரிக்கை நடத்திவருகிறார். சென்னையில் உள்ள பேப்பர் டீலர் ரமேஷ் என்பவரிடம் ரூ. 10 லட்சத்திற்கு பேப்பர் வாங்கியுள்ளார்.
ரமேஷ் அவரது செக்கை உடுமலைப் பேட்டையில் உள்ள பேப்பர் மில்லுக்கு அனுப்பியுள்ளார். அங்கு அந்த செக்பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து உடுமலை பேப்பர் மில் நிர்வாகம் ஷ்யாம் மீது உடுமலைநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உடுமலை ஜூடிசியல் நீதிமன்றம், ஷ்யாமிற்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 500அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், நஷ்ட ஈடாக ரூ. 8 லட்சத்தை பேப்பர் மில் நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும், அவ்வாறு தரத் தவறினால்மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் தீர்ப்பளித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!