அதிமுக தொகுதிப் பட்டியல்: அம்மா.. இப்படி செய்யலாமா!
சென்னை:
ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டேஇரவோடு இரவாக திடீரென இது தான் அதிமுக போட்டியிடப் போகும் பட்டியல் என 141 தொகுதிகளைஜெயலலிதா அறிவித்ததால் மூப்பானாரும் பிற கூட்டணிக் கட்சிகளும் கடும் வெறுப்பில் உள்ளனர்.
அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இது குறித்து கூட்டணிக்கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா ஏதும் ஆலோசிக்கவேயில்லை.
பா.ம.க. தலைவர் ராமதாசுடன் மட்டும் பேசிவிட்டு பட்டியலை வெளியிட்டுவிட்டார். இதில் 21 தொகுதிகள்த.மா.கா. கடந்த தேர்தலில் வென்ற இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூப்பனார் ஆலோசனை:
தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மூப்பனார், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனைநடத்தினர்.
கூட்டம் முடிந்த வெளியே வந்த நல்லகண்ணு கூறுகையில், அதிமுக தனது தொகுதிகளை மட்டும்அறிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், த.மா.கா. வென்ற இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கேட்டு வரும்திருப்பூர், நாங்குனேரி, பெருந்துறை ஆகிய தொகுதிகளையும் தனக்கு எடுத்துக் கொண்டது சரியல்ல. இதைஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
10ம் தேதி நடக்கும் எங்களது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இது குறித்துப் பேசுவோம் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் மூப்பனாரைச் சந்தித்துஇது குறித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியம், எனது கருத்தை மூப்பனாரிடம்தெரிவித்துவிட்டேன். இனி அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
நிருபர்களிடம் தங்கபாலு கூறுகையில், என்ன செய்வது என்பது குறித்து த.மா.கா.வும் காங்கிரசும் ஆலோசித்துவருகிறோம். இது தவிர வேறு எதையும் சொல்ல நான் தயாராக இல்லை என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications