கோவை, ஈரோடு மாவட்டங்களில் திமுகவுக்கு வைகோ தலைவலி
சென்னை:
திமுகவுக்கு அதிமுக தான் முக்கிய எதிரியாக இருக்கப் போகிறது என்றாலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில்திமுகவுக்கு முதல் எதிரியாக விளங்கப் போவது மதிமுக தான்.
முதலில் 9 சீட் தர்ரோம் என்று கூறி பின்னர் 21 சீட் தருகிறோம் என்று சொல்லி அதிலும் கேட்டதில் 12 சீட்களைமட்டுமே கொடுத்து வைகோவை கடைசி நேரம் வரை கழுத்தறுத்து வெளியே தள்ளியது திமுக.
இதனால் பெரும் கடுப்பில் இருக்கும் வைகோ நாம் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. திமுகவை எங்கெல்லாம்தோற்கடிக்க முடியுமோ அங்கெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்குள்ள வைகோவுக்கு ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களிலும்தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இந்தப் பகுதிகளில் திமுகவுக்கு மதிமுக பெரும் சவாலாக இருக்கப் போகிறது.
1996ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் இது விளங்கும். தனித்துப் போட்டியிட்ட மதிமுக இந்த இருமாவட்டங்களிலும் கணிசமான அளவில் வாக்குகளையும் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது.
கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர்,பல்லடம், மேட்டுப்பாளையம், பேரூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக சராசரியாக 13,000 வாக்குளைப் பெற்றது.
அதேபோல ஈரோடு மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் சராசரியாக 8,000 வாக்குகளைப் பெற்றது.
தீவிர ஜெயா எதிர்ப்பு அலையும், கருணாநிதி ஆதரவு அலையும் வீசிய நிலையில் தனித்து நின்று இத்தனைஇடங்களை வென்றது மதிமுக.
இந்த வாக்குகளை மீண்டும் இந்தக் கட்சி வென்றால் அது ஜெயலலிதாவுக்கே சாதமாக முடியும். தொழிலாளர்கள்நிறைந்த கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளை தன்னுடன் வைத்துள்ள அதிமுக ஏற்கனவே அட்வான்டெஜ்நிலையில் உள்ளது.
இதில் மதிமுக வாக்குகளை சிதறடித்தால் அது திமுகவுக்கு விரோதமாகி அதிமுகவுக்கு மிகவும் உதவிவிடும்.
தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் மதிமுக
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications