சென்னையில் பச்சையப்பா மாணவர்கள் கலாட்டா: பஸ் உடைப்பு
சென்னை:
சென்னையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் வன்முறையில் இறங்கினர். இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதில்ஒரு அரசு பஸ் சேதமடைந்தது. இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், பச்சையப்பா கல்லூரி முன் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினர். பின்னர் பஸ் டிரைவர் செல்வராஜை அடித்துஉதைத்தனர். பஸ்சின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர்.
திடீரென்று கல்லூரி மாணவர்கள், பஸ்சை அடித்து நொறுக்கும் செயலைத் தட்டிக் கேட்ட பெண் பயணிபஸ்சிலிருந்து வெளியே தள்ளி விடப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில்இன்னொருவரும் காயமடைந்தார்.
காயமடைந்த பயணிகள் இருவரும் கீழப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ்எதற்காக அடித்து நொறுக்கப்பட்டது என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை என்றனர்.
இந்த சம்பவத்தால் சென்னையில் பச்சையப்பா கல்லூரி ரோட்டில் இரண்டு மணி நேரம் பஸ் போக்குவரத்துகடுமையாகப் பாதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications