7 மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை ஜெ.: தமாகா
சென்னை:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள பட்டியல்படி தமாகாவுக்கு 7 மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புஅளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 141 தொகுதிகளின் பட்டியலை ஜெயலலிதா சமீபத்தில்வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தமாகா எம்எல்ஏ க்களின் 20 தொகுதிகளும், நத்தம் தொகுதியும்இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் தமாகாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இருப்பினும் இந்தத் தொகுதிகளை அதிமுக தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ளது. இது தமாகாதொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சட்டசபைத் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அதிமுக வெளியிட்டுள்ள பட்டியல்படி, நெல்லை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடிஆகிய 7 மாவட்டங்களில் தமாகாவிற்கு தொகுதிகள் இல்லை.
இந்த மாவட்டங்களில் தமாகா போட்டியிடும் வகையில் தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றுதமாகா தலைவர் மூப்பனாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
நாங்கள் கூறியதை அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். உரிய நேரத்தில் கூறி நடவடிக்கை எடுப்பதாககூறியிருக்கிறார். பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்புகிறோம் என்றார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications