ஜெ. வேட்பு மனுத் தாக்கல்: இன்று கிருஷ்ணகிரி.. நாளை ஆண்டிப்பட்டி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை கிருஷ்ணகிரியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம்கிருஷ்ணகிரியிலும் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமை முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 23 ம்தேதி வரை நடக்கிறது.

கிருஷ்ணகிரியில் மனுத்தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலைகிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மனுத்தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி தேர்தல்அதிகாரியும், தர்மபுரி மாவட்ட ஆர்.டி.ஓ.வுமான மதிவாணன் ஜெயலலிதாவின் வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டார்.

கிருஷ்ணகிரியில் மனுத்தாக்கல் செய்த ஜெயலலிதா ஆண்டிப்பட்டி செல்கிறார். ஆண்டிப்பட்டியில் அவர்செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்கிறார்.

அங்கிருந்து அவர் மதுரைக்குச் சென்று 18 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்யும் ஜெயலலிதா அடுத்த மாதம் 7 ம்தேதி சென்னை திரும்புகிறார். அங்கு அவர் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவனும், ஆண்டிபட்டியில் ஜெயலலிதாவைஎதிர்த்து திமுக வேட்பாளர் ஆசையனும் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+