For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் மக்களை வசீகரிக்கும் சிவன்

By Staff
Google Oneindia Tamil News

பாரிஸ்:

மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான சிவபெருமான் தொடர்ந்து பிரான்சு இலக்கியத்தை வசீகரித்து வருகிறார்.

பிரான்சில் ஏற்கனவே சிவபெருமானை பற்றிப் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. சிவபெருமானுக்கு என்றுமேபிரான்ஸ் இலக்கியத்தில் தனி இடம் உண்டு.

ஏற்கனவே பல புத்தகங்கள் சிவபெருமானைப் பற்றி இருந்தாலும் தற்போது மேலும் இரண்டு புத்தகங்கள் முந்தையபுத்தகங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் வெளி வந்துள்ளன.

புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான என். ராமச்சந்திரபட் என்பவர் லி ரிலிஜன் டி சிவா (சிவனின் மதம்) என்றபெயரில் புதிய புத்தகம் ஒன்றை சமீபத்தில் எழுதியிருக்கிறார்.

இரண்டாவது புத்தகத்தை புகழ் பெற்ற பிரான்சு எழுத்தாளரும் பிரான்சின் அரசியல் வல்லுனரின் மனைவியுமானகாதரின் கிளமென்ட் என்பவர் எழுதியுள்ளார்.

காதரினனின் கணவர் காசியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சிவபெருமானின்முக்கியமான ஸ்தலங்களில் காசி முக்கியமானது.

பட் எழதிய புத்தகம் பிாரன்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை மொழி பெயர்த்தவர் பிரான்சில்வாழும் பிரான்சு சமஸ்கிருத அறிஞர் பியரி-சில்வைன் பிலியோசாட் என்பவர். இந்த புத்தகத்தைவெளியிட்டவர்கள் அகாமாட் நிறுவனத்தினர்.

ஆங்கிலத்தில் வெளியான இந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகத்தை பிரான்சு மக்கள் படிக்கவேண்டும் என மிகவும் விரும்பினேன்.

இந்த புத்தகம் மதத்தை பற்றி அனைத்த விஷயங்களையும் அறிந்தவரால் எழுத்தப்ட்ட புத்தகம். இது பல முக்கியதகவல்களையும் அளித்துள்ளது என பிலியோசைட் கூறியுள்ளார்.

அகாமட் புத்தக பதிப்பகத்தின் உரிமையாளர் பெர்னார்ட் போவன்சந்த் கூறுகையில், நான் 30 ஆண்டுகளுக்குமுன்பு இந்தியாவுக்கு சென்ற போதே இந்தியாவை நேசிக்க ஆரம்பித்தேன்.

இந்தியா என்னை மிகவும் கவர்ந்தது. அன்று முதல் இன்றுவரை இந்தியாவின் தத்துவங்கள், இந்தியர்களின் தெய்வநம்பிக்கை, அங்கு பின்பற்றப்பட்டு வரும் மதவழிமுறைகள் பற்றி அங்குள்ளவர்களுடன் தொடர்பு கொண்டுஅறிந்து வருகிறேன்.

புத்தகங்களை வெளியிடுவது பணம் சம்பாதிக்கமட்டுமல்ல .பிரான்சு நாட்டு மக்கள் இந்தியாவைப் பற்றி நன்குஅறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம், தெய்வநம்பிக்கை, பின்பற்றப்பட்டு வரும் மதவிதிமுறைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.

இவர் இது பற்றியெல்லாாம் படித்து சில புத்தகங்கள் குறிப்பாக யோகா பற்றிய புத்தகமும் எழுதியுள்ளார்.

கிளமென்ட் கூறுகையில், இந்து கடவுள்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். குறிப்பாக சிவபெருமான் என்னைமிகவும் கவர்ந்தவர். அதனால்தான் நான் அவரைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளேன்.

காசிக்கு முதல் முறை போன போதே மீண்டும் மீண்டும் காசிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.இங்குதான் நான் சிவபெருமானைப் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

இந்த இரண்டு புத்தகங்களையும் பிரான்சுக்கான இந்திய தூதர் கன்ாவால் சிபல் தனது வீட்டில் நடந்த விழாவின்போது வெளியிட்டார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X