இலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதலில் பத்திரிக்கையாளர் காயம்
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் பேட்டி எடுத்து விட்டு திரும்புகையில், ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு காயம் ஏற்பட்டது.
அவர் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்து வருகிறார்.
அவர் பெயர் மரியா காத்தரின் கோல்வின். இவர் இரண்டு வாரங்களாக விடுதலைப்புலிகளின் மறைவிடத்தில்தங்கி அவர்களிடம் பேட்டி எடுத்தார். திரும்பி வரும் வழியில் அவரை இலங்கை ராணுவ வீரர்கள் தாக்கினர்.இந்தத் தாக்குதலில் காயமடைந்த காத்திரினை பிற ராணுவ வீரர்கள் தலைநகர் கொழும்பிற்குக் கொண்டு வந்தனர்.
நியூயார்க்கிலுள்ள லாங்க் தீவைச் சேர்ந்த கால்வின் கொழும்பிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
கால்வினுக்கு வயது 44. இவர் திங்கள்கிழமை இரவு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவின் வடக்குப்பகுதியில் விடுதலைப்புலிகளிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். பேட்டியை முடித்துக் கொண்டு அவர்கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சந்தேகத்தின் பேரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அப்போதுவிடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அப்போது காத்தரினின் இடது கண்ணிலும், தோளிலும் காயம் ஏற்பட்டது.. இதையடுத்து இலங்கை ராணுவவீரர்கள், காத்திரினை கொழும்பிற்குக் கொண்டு வந்தனர். முன்னதாக அவருக்கு அனுராதாபுராவிலும்,வவுனியாவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் கூறுகையில் அவரது உடல்நிலை தேறி வருவதாகக்தெரிவித்தனர்.
காத்தரின் லண்டனிலிருந்து வெளியாகும் சன்டே டைம்ஸ் பத்திரிக்கையில் புலனாய்வு செய்திகள் குறித்து பலகட்டுரைகள் எழுதியுள்ளார். குறிப்பாக சண்டை நடக்கும் யாழ்ப்பணத்திலிருந்து பல நல்ல செய்திகளை சேகரித்துக்கொடுத்துள்ளார். இதற்காக அவர் விருதும் பெற்றுள்ளார்.
1995 ம் ஆண்டுக்குப்பிறகு முதன்முதலாக விடுதலைப்புலிகள் இருக்கும் மறைவிடத்துக்குச் சென்ற முதல்வெளிநாட்டு பத்திரிக்கையாளர் இவரே.
1995 ம் ஆண்டு இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் பதுங்கியிருக்கும் பகுதிக்குச் சென்றுஅவுட்லுக் பத்திரிக்கையில் கட்டுரை எழுதினார். 1998 ம் ஆண்டு பி.பி.சி.தொலைக்காட்சி நிருபர்விடுதலைப்புலிகள் மறைவிடத்துக்குச் சென்று செய்தி சேகரித்தார்.
முன்னதாக விடுதலைப்புலிகள் மறைவிடத்துக்குச் சென்ற காத்தரின் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வனை சந்தித்தார். அவர், காத்தரினிடம் கூறுகையில் , நாங்கள் ஏப்ரல் 24 ம் தேதியுடன் முடிவடையும் சண்டைநிறுத்தத்தை மீண்டும் நீட்டிக்கவுள்ளோம். அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கத் தயாராக இருக்கிறோம் என்றுகூறியதாகக் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications