நாங்கள் சாதிக்கூட்டணி அல்ல சாதிக்கும் கூட்டணி: கருணாநிதி
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை தி.மு.க. செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க.வின்தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்வேட்பாளர்களை ஆதரித்து சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க.தவைவர் கருணாநிதி சூறாவளிசுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
அவர் தி.மு.க.தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசுகையில், நான் தமிழக மக்கள் ஆதரவை திரட்டவாக்காளர்களை சந்திக்க, என் அன்புக்குரிய உடன்பிறப்புகளை சந்தித்து பேசவும் புறப்பட்டுள்ளேன்.
நான் மீண்டும் 21ம் தேதி திரும்பி வருவேன். 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வேன். அது செல்லும் என்பதுஎனக்கு தெரியும். அந்த நம்பிக்கையில் இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன்.
சிலபேர் வேலி இருந்தால் கூட வேலியை தாண்டி காற்றிலே மிதந்தனர். அவர்களும் நாட்டில்அரசியல்வாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எந்த குற்றவாளியயும் - வெறும்குற்றவாளியல்ல ஊழல் செய்து 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தால், (ஜெயலலிதா) அவர்கள்வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், அவர்கள் வேட்புமனு செல்லாது என்ற தெரிந்திருந்தும் அவர்கள் சட்டத்தைதுச்சமாக நினைக்கின்றனர். (ஜெயலலிதா)
எப்படி சட்டத்தை வளைக்கப் போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும். அவர்கள் சட்டத்தைவளைப்பார்களா அல்லது வளைவார்களா என்பது விரைவில் சட்டம் வழங்குகிற தீர்ப்பில் தான் தெரியும்.
தி.மு.க.கூட்டணி பலமுள்ள கூட்டணியாக இருக்கிறது. தி.மு.கவில் 16 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியை சாதிக் கூட்டணி எனக் கூறுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை மறந்து விட்டு இந்தக்கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர்களை சாதிக் கூட்டணி என கூறுகிறார்கள்.
பா.ம.க.வை நண்பர் ராமதாஸ் தொடங்கிய போது அது சாதிக்கட்சியாகத்தான் இருந்தது. இன்று அக்கட்சி அரசியல்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
இதைப்போலவே இன்று தி.மு.க.வில் இடம் பெற்றுள்ள கட்சியில் நிச்சயம் அரசியல் கட்சியாக ஒளிவிடும். சிலசாதிகளுக்குள்ள நியாயமான கோரிக்கைகளை தி.மு.க.கேட்க தயாராக இருக்கிறது என்பதால் தான் எங்களுடன்அவர்கள் இணைந்துள்ளனர்.
இது சாதிக் கூட்டணி கிடையாது. இது சாதிக்கும் கூட்டணி என தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications