மதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுகவிலிருந்து விலகிய கட்சி செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதிதலைமையில் திமுகவில் சேர்ந்தார்.

எம்.எல்.ஏ.சீட்டை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் முதலில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது மதிமுக. அவர்களுக்கு 21தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்திலும் கையெழுத்தானது.

இதற்கிடையே திடீரென தொகுதிப்பங்கீடு விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து திமுகவிலிருந்து மதிமுக விலகியது. மதிமுக 213 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகஅறிவித்தது.

ஆனால் மதிமுகவின் செய்தித்தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து விலகியதை கடுமையாகஆட்சேபித்தார். தொடர்ந்து சில நாட்கள் கட்சி அலுவலகத்துக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை மதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதே கையோடு முதல்வர்கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்தபின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை நான் கடுமையாக எதிர்த்தேன். ஏனெனில் தமிழகத்தில் தேசியஜனநாயகக் கூட்டணி அருதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவன் நான்.

அதனால்தான் நான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன். பல நல்ல தொகுதிகளை மதிமுகவுக்குக்கொடுத்தார் கருணாநிதி. ஆனால் அவற்றை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு பிரிந்து விட்டது மதிமுக.

மதிமுகவில் சீட் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன்என்று கூறுகிறார்கள். அப்படி எதுவுமில்லை.

திமுகவில் ஏற்கனவே வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார் ராதாகிருஷ்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+