ஜெயலலிதா - மு.க. அழகிரி ரகசிய சந்திப்பு?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.சாப்பில் போட்டியிடும் வேட்பாளர்களைஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மதுரை வந்த ஜெயலலிதாவுடன் கருணாநிதியின்மகன் மு.க. அழகிரியும், அவரது ஆதரவாளர் பொன்.முத்துரமலிங்கமும் தொலைபேசிமூலம் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது இதில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் ஜெயலலிதா பிரசாரம்செய்து வருகிறார்.

அவரை முதல்வரின் மகன் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுபேசியதாக தமிழக சட்டசபை சபாநாயகர் பழனிவேல்ராஜன் வீட்டிலிருந்தும்,மதுரையில் இருக்கும் முக்கிய போலீஸ் அதிகாரியின் வீட்டிலிருந்தும்பத்திரிக்கைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி அவர்கள் கூறியாதாவது:

மதுரை அசோக் ஓட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவை மு.க.அழகிரியும்,பொன்.முத்துராமலிங்கமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ஜெயலலிதா அவர்களிடம் இப்போது அ.தி.மு.கவுடன் இணைவது குறித்துமுடிவெடுக்க வேண்டாம். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற உதவி செய்யுங்கள்.தேர்தல் முடிந்த பின் தேவையான ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என கூறினார்.

மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் வளர்மதி மற்றும் முக்கிய அ.தி.மு.க.பிரமுகர்கள்அழகிரி வீட்டிற்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திருப்பரங்குன்றம் தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன், பழனிவேல்ராஜன்ஆகியோரை தோல்வியடைச் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக அவர்கள்கூறினர்.

அழகிரியிடம் இது தொடர்பாக கேட்டபோது, நான் அரசியலில் தலையிடாமல்ஒதுங்கியிருந்து வருகிறேன். ஆனால் சிலர் என்னைப்பற்றி வதந்தி பரப்பிவருகிறார்கள்.

ஜெயலலிதாவுடன் பேசப்படுவதாக கூறப்படும் 18ம் தேதி நான் மதுரையிலேயேஇல்லை. என் மகனை வெளிநாடு அனுப்பி வைப்பதற்காக சென்னை சென்றுவிட்டேன்.

பழனிவேல்ராஜனை திட்டம் போட்டு தோல்வியடையச் செய்ய வேண்டிய அவசியம்இல்லை. அவராகவே தோற்றுவிடுவார் என்றார்.

மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் வளர்மதி கூறுகையில், நான் ஜெயலலிதாவுடன்பிரசாரத்தில் இருந்தேன். அவ்வாறு இருக்கும் போது நான் எப்படி அழகிரியை சந்திக்கமுடியும்.

இது போன்ற வதந்திகள் பரப்பி என்னை தோற்கடிக்க செய்ய வேண்டும் எனபழனிவேல்ராஜன் முயற்சி செய்கிறார். இதையெல்லாம் முறியடிபப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+