ஹாப்பி பர்த் டே, சச்சின்!

Subscribe to Oneindia Tamil

மும்பை:

Sachin Tendulkarசச்சின் ரமேஷ் டெண்டுல்கர், இதுதான் நம்மில் பலராலும் சச்சின், டெண்டுல்கர்,லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படும் டெண்டுல்கரின் முழுப்பெயர்.

இவருக்கு இந்த மாதம் 24ம் தேதி 27 வயது பூர்த்தியாகி 28ம் வயது தொடங்குகிறது.இதையொட்டி அவர் தட்ஸ் கிரிக்கெட் டாட் காம்க்கு அளித்த பிரத்யேக பேட்டி:

சச்சினிடம் அவரது சாதனைகள் பற்றி கேட்டபோது, இதில் நான் கூறுவதற்குஎதுவுமில்லை. நீங்கள்தான் இதைப்பற்றி கூற வேண்டும் என்றார்.

அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

Sachin Tendulkarகே: நீங்கள் 12 வருடமாக கிரிக்கெட் விளையாடி வருகிறீர்கள். நீங்கள் கடந்துவந்த பாதை எப்படி இருந்தது?

ப: நான் 12 வருடமாக கிரிக்கெட் விளையாடி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.12 வருடம் என்பது நீண்ட காலம். இந்தியாவுக்காக நான் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற என் கனவு நனவானது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

கே: இந்த காலகட்டத்தில் நீங்கள் எதையெல்லாம் இழந்ததாக கருதுகிறீர்கள்?எதையெல்லாம் பெற்றதாக கருதுகிறீர்கள்?

ப: இந்த காலகட்டத்தில் நான் இழந்தது எதுவும் இல்லை. எனக்கு கிரிக்கெட் நிறையஅள்ளித் தந்திருக்கிறது. நான் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலனைகிரிக்கெட் எனக்கு கொடுத்துள்ளது.

கே: இதுவரை நீங்கள் கிரிக்கெட்டிற்கு நீங்கள் செய்த சேவை என எதைக்கருதுகிறீர்கள்?

ப: இதுபற்றி நான் எதுவும் கூற முடியாது. பேட்ஸ்மேனாகவும், பந்துவீச்சாளராகவும்,ஃபீல்டராகவும், கேப்டனாகவும் என்னால் எந்த அளவு முடியுமோ அந்த அளவுகிரிக்கெட்டிற்காக பீல்டில் உழைத்திருக்கிறேன்.

நான் செய்த சேவைகள் என்ன என்பதை மற்றவர்கள்தான் எண்ணிப்பார்த்து கூறவேண்டும்.

கே: நீங்கள் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோது இந்தஅளவுக்கு புகழ் பெறுவோம் என நினைத்தீர்களா?

ப: நான் முதல் முதல் டெஸ்ட் பந்தயத்தில் விளையாட தொடங்கிய போது சிறந்தமுறையில் விளையாட வேண்டும் என நினைத்தேன்.

என்றுமே நானாகப் போய் என் மேல் எந்த விதமான பளுவையும் சுமத்திக் கொண்டதுகிடையாது. என்னால் இயன்றவரை சிறப்பாக விளையாட வேண்டும் எனநினைப்பேன். அதில் நான் வெற்றி பெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன்.

அதன் பின் ஒவ்வொரு முறையும் நான் நன்றாக விளையாடத் தொடங்கினேன். நான்நன்றாக விளையாடுகிறேன் என்ற எண்ணமே நான் மேலும் சிறப்பாக விளையாடஉதவியது.

Sachin Tendulkarகே: உங்கள் வெற்றியில் உங்கள் மனைவி, குடும்பத்தினரின் பங்கு என்ன?

ப: என் மனைவி எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் ஒவ்வொரு முறைவெற்றி பெறும் போதும், மேலும் பல வெற்றிகள் வரவிருக்கின்றது என கூறி என்னைஊக்குவிக்கிறார்.

எனது மூத்த சகோதரர் அஜீத், மற்றும் எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதரவுஇல்லையென்றால் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. சர்வதேச அரங்கில்இந்த அளவு வெற்றிகளையும் பெற்றிருக்க முடியாது.

நான் அவர்கள் அனைவருக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

கே: இந்திய அணியில் உங்களுடன் விளையாடி வரும் ராகுல் டிராவிட், அனில்கும்ப்ளே, வினோத் காம்ப்ளி, உங்கள் குரு ராம்கந்த் ஆச்ரேகர், அவரது மகள்குருகன்யா கல்பனா ஆகியோர் உங்களைப் பற்றி மிக உயர்வாக பேசுகிறார்கள்.இது பற்றி நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா?

ப: நான் எனது அணியில் விளையாடும் அனைவருக்கும், எனது குருவுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எப்போதும் எனக்கு உதவியாக இருந்துவந்துள்ளார்கள்.

Sachin Tendulkarஅவர்கள் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள்.

கே: இந்த நாடே உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறது!

ப: ஆம், இப்போதே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

கிரிக்கெட் ரசிகர்களும், எனது ரசிகர்களும் நான் நன்றாக விளையாட வேண்டுமெனபிரார்த்தித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்த்துக்களால் தான் நான் இந்த அளவுக்குமுன்னேறி இருக்கிறேன்.

நான் இதற்காக அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அவர்களின் தொடர்ந்த ஆதரவும், வாழ்த்துக்களும் என்னை நெகிழச் செய்கிறது. நான்ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் அவர்கள் எனக்கு அளிக்கும் ஊக்கம்என்னை திக்குமுக்காட செய்துவிடுகிறது.

அதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

27 வயது முடிந்து 28ம் வயதில் அடியெடுத்து வைக்கும், இந்தியாவின் இணையிலாசச்சின் மேலும் நாட்டுக்கு வெற்றிகளையும் பெருமையையும் குவிக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே சச்சின்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+