பெங்களூரில் கருணாநிதி கொடும்பாவி எரிப்பு
பெங்களூர்:
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் கொடும்பாவியைபெங்ளூரில் இருக்கும் கர்நாடக அ.தி.மு.கவினர் எரித்தனர்.
ஜெயலலிதாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகஅ.தி.மு.கவினர் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் மகாத்மா காந்திசிலை முன் கருணாநிதியின் கொம்பாவியை செவ்வாய்க்கிழமை இரவு எரித்தனர்.
இதன் பின் கர்நாடக அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் ராஜேந்திரனும்அ.தி.மு.க.மாநில செயலாளர் புகழேந்தியும் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகமுதல்வர் கருணாநிதி மத்திய ஆட்சியை பயன்படுத்தி ஜெயலலிதாவை தேர்தலில்போட்டியிட முடியாமல் செய்துவிட்டார்.
தமிழக மக்களிடம் ஜெயலலிதா மீது அனுதாப அலை வீசுகிறது. வரவிருக்கும் தமிழகசட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். மீண்டும் ஜெயலலிதாதமிழக முதல்வராக ஆவார். இதில் சந்தேகத்திற்கே இடமில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications