For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது கருணாநிதியின் பழிவாங்கும் படலம்: ஜெ. புகார்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பத்தூர்:

ஐந்து ஆண்டு காலமாக சதித் திட்டம் தீட்டிப் பழிவாங்கும் படலத்தை வெற்றிகரமாகநிறைவேற்றியுள்ளனர் என்று ஜெயலலிதா கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கும் அரண்மனை சிறுவயலுக்கும்இடையே செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்று கொண்டிருந்தபோதுதான் தனது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரம்ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே ஜெயலலிதா செல்போன் மூலம் தன் வக்கீல்களை அழைத்துப் பேசினார்.

பின்னர் திருப்பத்தூரில் நடந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில்,

பொய் வழக்குகளை என் மீது போட்டு அதில் எனக்குத் தண்டனைகளையும் கொடுக்கச்செய்தனர். இப்போது தேர்தல் அதிகாரிகளையும் மிரட்டியும், அவர்களுடையஉயிருக்கு ஆபத்து வரும் என்று அச்சுறுத்தியும் என்னுடைய வேட்புமனுக்கள்அனைத்தையும் தள்ளுபடி செய்யும்படி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆனால் தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே ஜெயிக்கும்.எனக்கு எதிரான சதித் திட்டத்தையும் சூழ்ச்சியையும் மாற்றும் சக்தி தமிழக மக்களாகியஉங்களிடம் உள்ளது. எனக்கு நீதி வழங்குங்கள்.

இன்று அவர்கள் கைகொட்டிச் சிரிக்கலாம்; நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள்வரும்போதுதான் சிரிப்பவர் யார் அழுபவர் யார் என்று தெரியும்.

புரட்சித் தலைவரின் தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. 141தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என்று எண்ணித் தொண்டர்கள் செயலாற்றவேண்டும். புரட்சித் தலைவர் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்றுபேசினார் ஜெயலலிதா.

தொடர்ந்து வேனுக்குள் இருந்தவாறே பிரச்சாரம் செய்துவந்த ஜெயலலிதா தனதுவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தி வந்தபின்னர் தான் முதன்முறையாகவேனில் இருந்து இறங்கி வந்து, திறந்த ஜீப்பில் நின்றவாறே பிரச்சாரம் செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X