சோனியாவுக்கு வாஜ்பாய் கண்டனம்
டெல்லி:
நாடாளுமன்ற மரபுகளை மீறி சோனியா காந்தி பேசுகிறார் என்று பிரதமர் வாஜ்பாய் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வரும் முன்பு முறைப்படிஎதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இருக்கை அருகே உள்துறை அமைச்சர்அத்வானி சென்றார்.
அப்போது அவரிடம் வாஜ்பாய் பற்றியும், பாரதிய ஜனதா கட்சியினர் பற்றியும் கோபமாக சோனியா காந்தி புகார்கூறினார்.
சோனியாவின் இந்தப் புகார் அத்வானியை தர்மசங்கடப்படுத்தியது. சோனியாவின் இந்தப் பேச்சுக்கு பிரதமர்வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தி தனது கோபத்தை வெளிப்படுத்த இது சரியான நேரம் அல்ல. இத்தகைய நடவடிக்கைநாடாளுமன்ற மரபுகளை மீறிய செயலாகும்.
மேலும் நான் நாடாளுமன்றத்தில் பேசியது சோனியாவுக்கு ஏன் இவ்வளவு கோபத்தை உண்டாக்கியது என்பதுபுரியவில்லை.
யார் மனதும் புண்படும்படி நான் பேசவில்லை. சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தாரை பழிவாங்குவதாகக்கூறுவது தவறு. சோனியா காந்தி பற்றியோ, இந்திரா, ராஜீவ் காந்தி பற்றியோ பாஜக எம்.பி.க்கள் தவறாகப்பேசவில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பலமுறை என்னைப் பார்த்துத் தவறாகப் பேசியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நடந்துள்ள மோசமான சம்பவங்களை அனைத்து கட்சியினரும் மறந்து, நாடாளுமன்றத்தின்உயர்ந்த மரபுகள் மீண்டும் தொடர ஒத்துழைக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications