• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கூட்டி..கழிச்சு..பெருக்கி..குழப்பத்தில் மக்கள்

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

அலறும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மர்மப் புன்னகையைப் பதிலாகக் கொடுத்த போதிலும், யாருக்கு ஓட்டுப் போடுவது என்றகுழப்பம் மக்கள் மனத்தில் பந்தாடிக் கொண்டுதான் இருக்கிறது.

திமுகவும் அதிமுகவும் ஊழல் ஊழல் என்று ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஊருக்கு முந்தி..

Jayalaithaஇரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்று நன்றாகத் தெரிந்தும், எல்லோரையும் குழப்ப வேண்டும் என்றகுறிக்கோளோடு, நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஆனால் தேர்தல் விதிமுறைகளின்படி அனைத்துத் தொகுதிகளிலும் அவருடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தான்எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல, ஜெயலலிதா ஒவ்வொரு ஊராகச் சென்று, கருணாநிதிதான் இதற்குக் காரணம் என்று கூறி அழுதுபுலம்பி பிரசாரம் செய்து வருகிறார்.

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற தான் தேர்தலில் போட்டியே போட முடியாத ஒரு நிலையில், தான்தான் தமிழகத்தின்வருங்கால முதல்வர் என்று வெகு தைரியமாகவே பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும்கூட ஜெயலலிதாதான் வருங்கால முதல்வர் என்று படு கூலாகக் கூறி வருகின்றனர்.

சரிவை நோக்கி...

Karunanidhiசென்ற தேர்தலைவிட இம்முறை பெரும் சரிவை நோக்கித் நொண்டிக் காலோடு தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது திமுக.பெரும்பாலான மாதிரி வாக்கெடுப்புகள் கூட திமுகவின் தேய்வுகளைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.

ஸ்டாலின்தான் முதல்வர் என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முதல்வர் கருணாநிதியே பலமுறை பிரசாரக் கூட்டங்களில்சொல்லி வருகிறார். இதன் எதிரொலியாக, மத்திய அமைச்சரும் முதல்வரின் மருமகனுமான முரசொலி மாறன் அரசியலுக்குமுழுக்குப் போடப் போவதாக அறிக்கை விட்டு, திமுகவை மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகளையும் அலறச் செய்தார்.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மு.க. அழகிரியோ, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திமுகவைத் தோற்கடிப்படிப்பதற்காகப்பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்.

சீட் கிடைக்காமல் பல்டி அடித்து..

மேலும், அமைச்சர் தமிழ்க்குடிமகன், தீப்பொறி ஆறுமுகம் மற்றும் சீட் கிடைக்காத சில திமுக எம்எல்ஏக்களும் முக்கியக்கட்சிப் பிரமுகர்களும் கட்சியை விட்டு வெளியே ஓடிக் கொண்டிருப்பதாலும் திமுக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் நிலையும் வழக்கம் போல தடுமாற்றம்தான். தமிழகத்தில் காங்கிரஸும் அதிமுகவும் ஒரே அணியில்இருக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸும் அதிமுகவும் எதிரிகள்.

அதிமுக தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள காங்கிரஸ், அருகில் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிக்குஎதிராகத்தான் போட்டியிடுகிறது.

காமராஜர் ஆட்சி.. காமராஜர் ஆட்சி..

Moopanarதமாகாவின் நிலையோ சொல்லவே வேண்டாம். நேற்று "காமராஜ் ஆட்சி" "காமராஜ் ஆட்சி" என்று கத்திக் கொண்டு வந்ததமாகா தலைவர் மூப்பனார், இன்று எம்ஜிஆர் ஆட்சிதான் வேண்டும் என்று ஜெயலலிதாவின் தலை நிறைய ஐஸை வைத்துக் கரைத்(ந்)துகொண்டிருக்கிறார். நாளை எந்த ஆட்சி வேண்டும் என்று சொல்வாரோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம் (அவருக்குக் கூடத் தெரியாது).

மத்தியில் தேசிய முன்னணியின் அங்கமான பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் வைகோ தலைமையிலான மதிமுக, தமிழகத்தில் அதேதேசிய முன்னணியின் முக்கிய அங்கமாக விளங்கும் திமுகவுக்கு எதிர்க் கட்சியாக விளங்குகிறது.

கூலாக வைகோ..

Vaikoகலைஞரை எதிர்க்கும் விதமாகவும், வாக்குகளைப் பிரிக்கும் விதமாகவும், பாஜக போட்டியிடும் இடங்களைத் தவிர தமிழகத்தின்213 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.

ஆனால் வைகோ ரொம்பவும் கூலாகத்தான் இருக்கிறார். பிரசாரக் கூட்டத்தில் கைகூப்பியபடியே நின்று கொண்டிருந்த தன் கட்சிவேட்பாளரை அழைத்து, கண்டித்து "கைகூப்பினால் மட்டும் நமக்குத்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்களா? வந்து வணக்கம்சொல்வதோடு நம் கடமை முடிந்தது" என்று கூறியதோடு நில்லாமல், மக்களைப் பார்த்து "மதிமுக சார்பில் ஓட்டுக் கேட்பதுஎங்கள் கடமை.

உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவர்களுக்கே உங்கள் ஓட்டைப் போடுங்கள். ஆனால் ஓட்டுப் போடாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்" என்று அவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

இது தவிர, சாதிப் பிரச்சனைகளால் நூற்றுக்கணக்கான உயிர்கள் போனது மட்டுமின்றி, அதனால்தான் மாவட்டங்கள்,போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாறின என்பதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

குழப்பத்தில் மக்கள்..

ஆனால், தமிழகத்தின் அனைத்துக் கூட்டணிகளிலும் சாதிக் கட்சிகள் தங்களை இணைத்துப் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.

என்னதான் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தாலும், கள்ள ஓட்டைக் கட்டாயம் போடுவோம் என்று எல்லாக் கட்சிகளும்கூட்டணி வைத்துக்கொண்டு சொல்வது போல, பல கட்சித் தொண்டர்களும் கூறி வருகின்றனர்.

வாக்களிப்பது அனைவரின் கடமை. யாரும் தங்களுடைய ஓட்டுக்களை வீணாக்கி விடாதீர்கள் என்று தேர்தல் கமிஷன் வேறு கூறிவருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், மக்கள் என்னதான் செய்ய முடியும்? குழம்பத்தான் முடியும்!!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X