வாஜ்பாய் வருகை: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vajpayeeதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வரும் 7ஆம் தேதி பிரதமர் வாஜ்பாய் சென்னைவருகிறார். இதையொட்டி சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவருடைய பாதுகாப்புக்காக சென்னையில் மட்டும் 10,000 போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.

குண்டு துளைக்காத மேடை:

கடற்கரையில் அவர் பேசுவதற்காகக் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படும்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருக்கும் மத்திய போலீசார், கர்நாடக, ஆந்திர, மராட்டிய மாநில சிறப்புக் காவல்படையினரும் பிரதமர் வருகையின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

இது தவிர, தமிழகக் காவல் துறையில் உள்ள ரகசிய போலீசார், அதிரடிப் படை போலீசார் மற்றும் பல்வேறு பாதுகாப்புநுட்பங்களில் தனித் திறமை பெற்றவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

பிரதமர் பேசவிருக்கும் மேடை இருக்கும் பகுதியில் மெட்டல் டிடக்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் துணையோடு தொடர்ந்துசோதனை நடந்து வருகிறது.

பிரதமர் பயணம் செய்வதற்காக 2 குண்டு துளைக்காத கார்கள் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

கூட்ட மேடையைச் சுற்றி 3 வளையங்களாகப் பாதுகாப்புப் பணியில் போலீசார் நிறுத்தப்படுவர். கடல்வழியில் யாரும் ஊடுருவக்கூடாதுஎன்பதற்காகக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் படகுகளில் ரோந்து வருவார்கள்.

பிரதமருடைய காரின் முன்னும் பின்னும் வீடியோ காமிரா பொருத்தப்பட்ட கார்கள் பாதுகாப்பாக வரும்.

இந்த வீடியோவில் பதிவாகும் காட்சிகளைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தே போலீசார் கண்காணிப்பார்கள்.

தவிர, விமான நிலையத்தில் இருந்து கடற்கரை வரை ஆங்காங்கே ரகசிய வீடியோ காமிராக்கள் பொருத்தப்படும்.

பிரதமருக்கு எத்தகைய பாதுகாப்புகள் அளிக்கப்படும் என்பது பற்றி ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+