தெஹல்கா டாட் காம் ஆசிரியரைக் கொல்ல சதி
டெல்லி:
ஆயுதப்பேர ஊழலை தனது இணைய தள நிருபர்கள் மூலம் அம்பலமாக்கிய தெஹல்கா டாட் காம் இணைய தளஆசிரியர் தருண் தேஜ்பாலைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது:
தெஹல்கா டாட் காம் இணையதளத்தை நடத்தி வரும் தருண் தேஜ்பால், இணையதள நிருபர்கள் மூலம் ஆயுதப்பேரஊழலை வெளிக்கொண்டு வந்தார்.
இதையடுத்து அவரைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை நாங்கள் கைதுசெய்துள்ளோம்.
இதற்கிடையே, தருண் தேஜ்பால் (38) தன்னைக் கொல்ல வந்தவர்கள் குறித்து தகவல்கள் எதுவும்கொடுக்கவில்லை. இருப்பினும், தன்னைக் கொல்ல முயற்சித்தவர்கள் குறித்து சில தடயங்களைப் போலீஸாரிடம்அவர் காட்டியுள்ளார்.
"எனது உயிருக்கு ஏற்கனவே பல முறை மிரட்டல்கள் வந்துள்ளது. இதுகுறித்து நான் உள்துறை அமைச்சகத்திடம்புகார் கூறியதால் எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது பாதுகாப்பு மீண்டும்பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தேஜ்பால் கூறினார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பார்களா என்ற கேள்விக்கு, தான் இதுகுறித்துபதில் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் தருண் தேஜ்பால்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், அகில இந்திய பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர்ஜெயா ஜெட்லி ஆகியோர் லஞ்சம் வாங்கியதை வீடியோ மூலம் படம்பிடித்து அதை நிருபர்கள், காங்கிரஸ் கட்சிபிரமுகர்கள் ஆகியோரிடம் தெஹல்கா டாட் காம் நிருபர்கள் காட்டினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் ராஜினாமா செய்தனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டசும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிவாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்:
தெஹல்கா டாட் காம் இணையதள ஆசிரியர் தருண் தேஜ்பாலைக் கொலை செய்ய முயன்று கைது செய்யப்பட்ட 6பேரும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளிகள் என்று தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications