For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருத்துக் கணிப்பு முடிவுகள்... உற்சாகத்தில் அதிமுக!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகி வரும் கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுகவும், அதன்பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்என்று பல அமைப்புகளும் பத்திரிகைகளும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வருகின்றன.

சென்னை லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிய வந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிமுககூட்டணிக்கு 110 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது. திமுக கூட்டணிக்கு 90 முதல்100 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

தேர்தல் சமயத்தில் ஏதும் பெரிய அளவில் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருந்தால் இந்தமுடிவுகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 2 நாட்களில் இக்கருத்துக்கணிப்புஎடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தி வீக் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது.இப்பத்திரிகையின் கருத்துக்கணிப்பு முடிவின்படி அதிமுக கூட்டணிக்கு 195 முதல் 210 இடங்கள் வரைகிடைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 53.5 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. திமுக 20முதல் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் இக்கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிகளுக்குபூஜ்யத்தையே கொடுக்கிறது இக்கருத்துக்கணிப்பு.

ஏப்ரல் 17 மற்றும் 26ஆம் தேதிகளில் இந்திய டுடே-ஆங்கில வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், அதிமுககூட்டணிக்கு அதிகபட்சம் 130 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சமாக 120இடங்கள் வரை அதிமுகவுக்குக் கிடைக்கும் என்றும் இது கணிக்கிறது.

திமுக கூட்டணிக்கு 105 முதல் 115 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இது கூறுகிறது. பிற கட்சிகளுக்குஅதிகபட்சம் 5 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இது கூறுகிறது.

ஜூனியர் விகடன் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம்கிடைக்காது என்று தெரிகிறது. திமுக கூட்டணிக்கு 125 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணிக்கு 107 இடங்கள்வரையிலும் கிடைக்கலாம் என்று இது கணிக்கிறது.

மதிமுகவுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இது தெரிவிக்கிறது. இருந்தாலும் இந்த முடிவுகள் கடைசிநேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டது என்றும் இது கூறுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் கருத்துக்கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 170 இடங்கள் வரைகிடைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு 80 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

மதிமுகவை இழந்ததால் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அது மாறி விட்டதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.தனிப் பெரும்பான்மையுடன் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார் என்றும் இக்கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அவுட் லுக் மற்றும் சென்டர் ஃபார் மீடியா ஸ்டடிஸ் அமைப்பு சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுககூட்டணி 175 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதலாக4.12 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 68 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இக்கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.பிற கட்சிகள் அதிகபட்சம் 6 இடங்களில் வரை வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்புகளின்படி பார்த்தால், அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது பெரும்குழப்பமாகத் தோன்றுகிறது. இருப்பினும் இந்தத் தேர்தலில் பெரிய பாதிப்பை அதிமுக ஏற்படுத்தப்போகிறதுஎன்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இது அதிமுகவுக்கு உற்சாகத்தையும், திமுகவுக்கு கலக்கத்தையும்ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X