சென்னையில் திமுக அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்
சென்னை:
திமுக வேட்பாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதியின் கட்சி அலுவலகத்தைவியாழக்கிழமை பிற்பகல் கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது.
சென்னை எழும்பூர் டவுன்டவுன் பகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியின் அலுவலகத்தை கும்பல் ஒன்றுஅடித்து நொறுக்கியது. அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த 15 க்கும் மேற்பட்ட கார்களையும் அக்கும்பல்அடித்து நொறுக்கியது.
இந்தத் தாக்குதலுக்கு அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழக முன்னேற்றக் கழக வேட்பாளர்ஜான்பாண்டியன் தான் காரணம் என திமுக குற்றம் சுமத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பரிதி இளம்வழுதி, வாக்காளர் பட்டியலில் பெயர் பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போயிருப்பது குறித்துப் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
அவர் கூறுகையில், எனது நண்பர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போயிருந்த காரணத்தால் வாக்களிக்க முடியாமல் தவித்ததாகக் கூறினர்.
ஜான்பாண்டியன் மீது திமுகவினர் கல்வீச்சு:
முன்னதாக காலையில், ஜான் பாண்டியன் தான் போட்டியிடும் எழும்பூர் தொகுதியில் 12 கார்களுடன்வந்திறங்கினார். பின்னர் எழும்பூர் தொகுதி அஞ்சுகம் அம்மையார் நகர் வாக்குச்சாவடி வாசலில் நின்று கொண்டுவாக்காளர்களிடம் தங்கள் கூட்டணிக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டார்.
இதைப்பார்த்த திமுகவினர் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர்.இதையடுத்து பூத் ஏஜன்டுகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் பார்வையாளரிடம் புகார்கொடுத்தனர்.
ராயபுரத்தில் கள்ள ஓட்டு:
ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், எங்கள் தொகுதியில் உள்ளபல வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டுப்போட முயன்றனர். அவர்களின் முயற்சியை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்றார்.
இந்தத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள்விடுபட்டுப் போயிருந்ததுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்துவாக்களித்தனர். குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள், பிற பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகமாகஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குச்சாவடிகளில் தரம் குறைந்த அடையாள மை பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. தியாகராயநகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த வாக்காளர் ஒருவர் கூறுகையில், இந்தத் தேர்தலில் கையில்தடவப்பட்ட மை மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. அது எளிதில் அழிந்து விடும் வகையில் இருந்தது என்றார்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் பல வாக்காளர்கள் வேறு அடையாளங்களைக் காட்டிஓட்டுப் போட வந்தனர். ஆனால், சில இடங்களில் இதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் நகர்ப்புற வாக்காளர்கள் மிகவும்மகிழ்ச்சியுடன் வாக்களித்தனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பதுமிகவும் எளிதாக இருந்தது என்றும் அவர்கள் கூறினர்.
வாக்களித்த வயதான பெண்மணி ஒருவர் கூறுகையில், முன்பு நாங்கள் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி அதை மடித்து,வாக்குப்பெட்டியில் போடுவோம். இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களிப்பது மிகவும்எளிதாக உள்ளது என்றார்.
ஆனால், கிராமப் பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!