கடன்பட்டவரின் பிணத்தைப் புதைக்கவிட மறுத்த ஜமாத்
இராமநாதபுரம்:
கடன்பட்டவரின் பிணத்தைப் புதைக்க கிராம முஸ்லீம் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்தது.
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தைச் சேர்ந்த ஹசன் இப்ராஹிம் (75).
ஜமாத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இவர் 2,500 ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம்.
இந்நிலையில் ஹசன் இறந்துவிட்டார்.
ஆனால், பணத்தைத் திருப்பித் தராமல் அவருடைய பிணத்தை ஜமாத்தில் புதைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அவருடைய உறவினர்களிடம் எதிர்த்தரப்பினர் கூறினர்.
இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து, கீழக்கரை காவல்துறை அதிகாரி முத்துவேல் சம்பவ இடத்திற்குச் சென்றுசமாதான முயற்சியில் ஈடுபட்டார்.
இருப்பினும், பணம் தராமல் பிணத்தைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர் ஜமாத்தைச்சேர்ந்தவர்கள்.
உடனே, தானே அந்தப் பணத்தைத் தருவதாக முத்துவேல் ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ஹசன் இப்ராஹிமின் பிணம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜமாத் என்ற பெயரில், திருமணம் இறப்பு போன்ற விஷயங்களில் பணம் பாக்கி என்று கூறிக்கொண்டு,திருமணத்தை நிறுத்துவதோ, பிணத்தைப் புதைக்க விடாமல் செய்வதோ பொதுமக்களுக்குவிரோதமான செயல் என்று கூறிய முத்துவேல், தான் ஒப்புக் கொண்டபடி தன்னுடைய கைப்பணத்தில்இருந்து 2,500 ரூபாயை ஜமாத்திடம் கொடுத்தார்.
பிணத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த ஜமாத்தை பல முஸ்லீம் பெரியவர்களும் கடுமையாகக்கண்டித்தனர். இது இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கு முரணானது. இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்என அவர்கள் கூறினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications