தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
கோவை:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு மந்த நிலையில் இருந்தாலும், கோவையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத்தொடங்கியுள்ளனர்.
கோவையில் காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையைக் காண முடிந்தது. பாரதிய ஜனதாவும், தமிழ் மாநில காங்கிரசும் மோதும் கோவைகிழக்குத் தொகுதியில் பல பூத்துகளில் வரிசையில் நின்று வாக்களார்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதே போன்று புறநகர் பகுதிகளிலும் மக்கள் ஓட்டளிக்க ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் கமிஷனின் புது விதிமுறைகள் மக்களுக்கு சற்று சிரமத்தைஅளித்தாலும், வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற ஊருக்கு போக்குவரத்து வசதி இல்லை. பவானி ஆற்றைக் கடந்து இந்தஊருக்குச் செல்ல பரிசல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கும் அதிகாரிகள் சென்று வாக்குப் பதிவை மேற்கொள்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் குளிர் நிலவுவதால் சற்று மந்தமான முறையிலேயே வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. இதே போன்று வால்பாறையிலும்ஓட்டுப் பதிவு மந்தமான நிலையில் துவங்கியுள்ளது.
தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மக்கள் அதிகாலையில் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
எவ்வித சலனம் இன்று அமைதி காத்த மக்கள் ஒரு மவுனப் புரட்சியை ஏற்படுத்தவுள்ளனர். காலை 10 மணிக்குள் 10 சதவீத வாக்குகளுக்கும் மேல்வாக்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நிலையில் வாக்களார்கள் வாக்களித்தால், மாலைக்குள் 60 சதவீத வாக்குகளுக்கும் மேல் பதிவாகும் என அதிகாரிகள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications