ஜெ. முதல்வராக ஆளுநர் அனுமதிப்பாரா?
சென்னை:
திமுகவின் கனவை தவிடு பொடியாக்கிவிட்டு மீண்டும் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறார் ஜெயலலிதா.
234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 195 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியும் தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால், அதிமுகவுக்கு மட்டும் கிட்டத்தட்ட 130 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சிஅமைக்க 117 எம்.எல்.ஏக்கள் போதும்.
ஜெயலலிதாவுக்கு சாதகமாக இத்தனை விஷயங்கள் இருந்தாலும் அவர் மீண்டும்முதல்வராக முடியுமா என்பது இன்னும் குழப்பமாகத் தான் உள்ளது.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களையும்தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடமுடியாமல் போனது.
சட்டப்படி ஒருவர் முதல்வரான பின்னர் 6 மாதத்தில் எம்.எல்.ஏ. ஆனால் போதும்.
இதன் அடிப்படையில் ஜெயலலிதா தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோருவார் ஜெயலலிதா.
ஆனால், அவருக்கு ஆளுனர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைப்பாராஎன்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியானபாத்திமா பீவி சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். இருந்தாலும் மூத்த வழக்கறிஞர்களைஅழைத்து அவர் ஜெயலலிதா தொடர்பாக ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார்.
தன்னை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என ஜெயலலிதா நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
ஆனால், கருணாநிதியும் பிற எதிர்க் கட்சிகளும் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்கஆளுனர் அழைக்க மாட்டார் எனக் கூறி வருகின்றன.
2 நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications