22 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 22 ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் 5 ம் தேதி தொடங்கி 28 ம் தேதி வரை ப்ளஸ் டூ தேர்வு நடந்து முடிந்தது. இதே போல் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடந்தது.
இந்த இரண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களும் ஏப்ரல் மாதத்திலேயே திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போதுமாணவர்களின் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தப்பணி இன்னும் சில தினங்களில் முடிவடைந்து விடும். இதையடுத்து வரும் 21 ம் தேதி அல்லது 22 ம் தேதிப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications