கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்காக அடைக்கப்பட்டுள்ள ஜெயராமன், பூச்சி,ராஜா, பாலுச்சாமி ஆகியோரை விசாரணைக்காக போலீசார் உசிலம்பட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

கைதிகளுக்கு பாதுகாப்பாக ரிசர்வ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், தலைமை போலீஸ்காரர் முனியாண்டிமற்றும் போலீசார் கண்ணன், மனோகரன், அன்பழகன், பொன்னுச்சாமி ஆகியோர் சென்றனர்.

அப்போது பொன்னுச்சாமி சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறி சென்றார். அவருடன் வந்திருந்த கண்ணனுக்குபொன்னுச்சாமி மேல் சந்தேகம் வந்து அவரை பின் தொடர்ந்து சென்றார்.

கைதிகளுக்கு கொடுப்பதற்காக, கைதியின் உறவுக்கார பெண்ணிடமிருந்து கஞ்சாவை வாங்கி பொன்னுச்சாமிபையில் பத்திரப்படுத்திக் கொள்வதை கண்ணன் பார்த்தார். இதை மற்ற போலீசாரிடமும் அவர் கூறினார்.

அவர்கள் பொன்னுச்சாமியை கண்டித்த போது நான் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என பதிவு செய்துகொள்ளுங்கள் என கூறி விட்டு சென்று விட்டார்.

இது குறித்து அன்பழகன் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொன்னுச்சாமிகைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 215 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+