தி.மு.கவுக்காக மொட்டை போட்ட சிறுவன்
ஈரோடு:
சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாவிட்டால் மொட்டை அடித்துக் கொள்வேன் என பந்தயம் கட்டியசிறுவன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக மொட்டை அடித்துக் கொண்டார்.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகன்கதிரவன் (வயது 11). இவர் 6வது வகுப்பு படித்து வருகிறார்.
வெங்கடேஷ் தீவிர தி.மு.க ஆதரவாளர். கதிரவன் தன் தந்தையுடன் நடக்கும் தி.மு.க. கூட்டங்களுக்கு செல்வதுவழக்கம். அவரும் தி.மு.க. ஆதரவாளராகி விட்டார்.
சில தினங்களுக்கு முன் தமிழக தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என வெங்கடேஷ் தன்நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கதிரவன் மீண்டும் தி.மு.கதான் வெல்லும்.கருணாநிதிதான் முதல்வராக வருவார் என்றார்.
வெங்கடேஷின் நண்பரும், தி.மு.க. ஆதரவாளருமான நல்லசிவம் (வயது 45) என்பவர் அ.தி.மு.கதான் வெற்றிபெறும் என்றார். கதிரவனுக்கும், நல்ல சிவத்திற்கும் இடையேயான விவாதம் முற்றி பந்தயத்தில் சென்று முடிந்தது.
தி.மு.க. தோற்றால் தான் மொட்டையடித்துக் கொள்வதாக கதிரவன் பந்தயம் போட்டார்.தி.மு.க.தோல்வியடைந்ததால் தான் ஒப்புக் கொண்டபடி மொட்டை அடித்துக் கொண்டார் கதிரவன்.
இது குறித்து கதிரவன் கூறுகையில், கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மக்களுக்கு நல்லதுசெய்தார். அதனால் அவர் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் பந்தயம் கட்டினேன். பந்தயத்தில் தோற்றுவிட்டேன். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதுதானே முறை என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications