For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அமைச்சர்களை!

By Staff
Google Oneindia Tamil News

ராஜேந்திர பிரசாத்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எம்.எல்.ஏ.வாகி சட்டசபைக்குள் நுழைபவர். கிறிஸ்தவ நாடார்சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1972-ல் அ.தி.மு.கவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.1884-ல் மாவட்ட செயலாளராக இருந்தார்.

முதல் முறையாக சட்டசபைக்கு செல்வதோடு அமைச்சராகவும் ஆகியிருக்கிறார்.

இவர் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் தொகுதியில்தான் கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது.தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற முதல் தொகுதி இது என்பது நினைவிருக்கலாம்.

பொள்ளாச்சி ஜெயராமன்

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராமன் பொள்ளாச்சி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகியுள்ளார். 48வயதாகும் ஜெயராமன், மாணவர் பருவத்திலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

1972-ம் ஆண்டு கோவை, ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக இருந்தார். கோவை புறநகர்மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்துள்ளார்.

இதற்கு முன்பு இரண்டு முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.முதல் முறை ஜெயலலிதா அணிஅ.தி.மு.க. சார்பில் 1989-ல் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் 1996-ல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுதோல்வியைத் தழுவினார். தற்போது 3-வது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஏ.வெங்கடாசலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முத்துராஜாசதாயத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

பா.வளர்மதி

ஆலந்தூர் தொகுதியில் தனது அரசியல் குருவான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்துசாதனை படைத்துள்ளார் வளர்மதி.

அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ள வளர்மதி பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார்.

1984-ல் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்பல்வேறு வாரியங்களின் தலைவராக இருந்துள்ளார்.

வளர்மதிக்கு கணவர், 2 மகன்கள் உள்ளனர்.

சண்முகம்

திண்டிவனம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மதுரையில் பி.எல். படித்தவர். அப்போதே மாணவர்அணி இணைச் செயலாளராக இருந்தார்.

விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இப்போது இருக்கிறார். வன்னிய சமுதாயத்தைச்சேர்ந்தவர்.

மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

வி.சுப்ரமணியன்

கண்டமங்கலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விழுப்புரம் மாவட்டத்திற்குக் கிடைத்துள்ள 2-வது அமைச்சர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். 1972-ல் அ.தி.மு.கவில் சேர்ந்தார். இடையில் வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை. தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்துள்ளார். 1980 மற்றும் 1991ல் கண்டமங்கலம்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான சுப்ரமணியத்தின் சொந்த ஊர் கண்டமங்கலம் அருகே உள்ளசென்னகுப்பம் ஆகும்.

மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

கே.பாண்டுரங்கன்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பி.ஏ. பட்டதாரி.

46 வயதாகும் பாண்டுரங்கன் 1993-ம் ஆண்டு கதர் கிராம வாரியத் தலைவராக இருந்துள்ளார். பாலமதி என்றமனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது.

எஸ்.எஸ்.திருநிாவுக்கரசு

காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

52 வயதாகும் திருநாவுக்கரசு, செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருக்கிறார். வக்கீலானதிருநாவுக்கரசு, காஞ்சிபுரம் நகரசபைத் தலைவர் பதவியையும் வகிக்கிறார்.

1972-ல் எம்.ஜி. ஆர். கட்சி தொடங்கியது முதல் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர். பல்வேறுதேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவினார்.

இதேபோல, கடந்த 1989 மற்றும் 1996ல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இருப்பினும்ஜெயலலிதா இவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியைக் கொடுத்தார். அவரது நம்பிக்கைவீண் போகாமல் வெற்றிக் கனியைப் பறித்துள்ளார் திருநாவுக்கரசு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X