22-ம் தேதி புதுவை முதல்வராக பதவியேற்கிறார் சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக ப.சண்முகம் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பதவியேற்கிறார்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்பதால் த.மா.கா. (2), அ.தி.மு.க (3) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்ஆட்சியமைக்கவுள்ளது.

முதல்வர் பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பம் நிலவியதால் ஆட்சியமைப்பதில் தாமதம்ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போதைய முதல்வர் ப.சண்முகமே மீண்டும் முதல்வராக நயமிக்கப்படுவதாககாங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களான குலாம் நபிஆசாத் மற்றும் மோதிலால் வோரா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் தலைவராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். தான் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டதற்கான கடிதத்தை துணை நிலை ஆளுநர் ரஜினி ராயிடம் அவர் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய உள்துறை செயலகத்தின் அனுமதிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார்.

இந்த நிலையில், மீண்டும் முதல்வராக ப.சண்முகம் செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்கவுள்ளார். அவருடன்சில அமைச்சர்களும் பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. சேருமா?

ப.சண்முகம் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர அ.தி.மு.க.வையும் சேர்க்ககாங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமானஜெயலலிதாவுடன் பேசுவதற்காக முதல்வர் ப.சண்முகம் திங்கள்கிழமை சென்னை வருகிறார்.

ஜெயலலிதாவுடன் பேசி, கூட்டணி அரசில் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கைவைப்பார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+