மின் நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல்மின் நிலைய தொழிலாளர்கள் பிரச்சினையில் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வேலைநிறுத்தம் வாபஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலைய தொழிலாளர்கள், ஊதிய விகித திருத்தம் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநறுத்தம் காரணமாக தமிழகத்தில் மின் விநியோகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. சீரான மின்விநியோகமின்மை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமலாகியுள்ளது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் உதவியின்றி பொறியாளர்கள் உதவியுடன் மின் உற்பத்தியைமேற்கொண்டுள்ளனர் நெய்வேலி மின் நிலைய அதிகாரிகள். இதையடுத்து இரு உற்பத்திப் பிரிவுகளிலும்புதன்கிழமை மின் உற்பத்தி தொடங்கியது. வெறும் 220 மெகாவாட் மின்சார உற்பத்தி என்ற அளவில் இருந்தஉற்பத்தி தற்போது 900 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

விரைவில் முழுத் திறனான 1470 மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கு எட்டப்படும் என்று நெய்வேலி மின்உற்பத்திக் கழக தலைவர் ஏ.கே.சஹாய் கூறியுள்ளார்.

மேலும், தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேசப்பட்டு வருவதாகவும், விரைவில் உடன்பாடு எட்டப்படும்என்றும் அவர் தெரிவித்தார். இதனால் விரைவில் வேலைநிறுத்தம் வாபஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கேரள மாநிலத்திலிருந்து தினசரி 100 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்ற கேரள முதல்வர் ஏ.கே.அந்தோணி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+