கள்-ளச் சாரா-யம் விற்--கும் தி-மு-க-வி-னர்: ஜெ. க-டும் தாக்-கு
சென்னை:
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியினர் கள்ளச் சாராயம் விற்பதை தடுக்க முடியாமல் காவல் துறையின் கைககள் கட்டப்பட்டு இருப்பதால்தான் விஷச் சாராயச் சாவுகள் தொடர் கதையாகி விட்டன என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கருணாநிதி ஆட்சியில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது என்பதற்கு கலசப்பாக்கத்தில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகளே சான்று.விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் 15 பேர் இறந்து போயிருக்கின்றனர்.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத கருணாநிதி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள படியம்பட்டு, -நம்மியந்தல், காங்கேயனூர் ஆகிய கிராமங்கள் உட்பட பல்வேறுஇடங்களில் கள்ளச் சாராயம் விற்கப்படுவது தெ-ரிந்தும் காவல் துறையினர் -நடவடிக்கை எடுக்காததன் காரணமாக விரும்பத் தகாத விஷச் சாராயச்சாவுகள் ஏற்பட்டுள்ளன.
கருணாநிதி கட்சியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் விற்ற கள்ளச் சாராயத்தைக் குடித்ததில் 15 பேர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போளூர் மருத்துவமனையில் இல்லாதகாரணத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பதை அறியும் போது, கருணாநிதி ஆட்சியில் மருத்துவமனைகளின் செயல்பாடுகள்சீர்கேடு அடைந்திருப்பதைத் தான் காட்டுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பவர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியின் உச்சகட்டமாக இந்த விஷச் சாராய விற்பனையும்,அநியாயச் சாவுகளும் ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு -முழுவதும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாநிதி கட்சியினர் கள்ளச் சாராயம் விற்பதைத் தடுக்க -முடியாமல் காவல் துறையின் கைகள்கட்டப்பட்டு இருப்பதால் விஷச் சாராயச் சாவுகள் தொடர் கதையாகி விட்டன.
விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெ-ரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு உ-ரியநவாரண உதவிகளையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான வசதிகளையும் கருணா-நிதி அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெய-ல-லி-தா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications