ஜெ. முதல்வரானதில் தவறில்லை என்கிறார் பாஸ்வான்
வாரணாசி:
ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா முதல்வரானதில் தவறில்லை என்றுமத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாரணாசியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜவுக்கும், சமதா கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை விரைவில் சுமூகமாகமுடியும். இதனால் பிரச்சனை எதுவும் ஏற்படாது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளார். இது தவறான செயல் அல்ல.ஏனென்றால், மக்கள் தற்போது ஊழலை ஒரு பெரும் பிரச்சனையாகக் கருதவில்லை என்றார் பாஸ்வான்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!