இந்தியாவில் பயிற்சி பெற விரும்பும் சவுதி அதிகாரிகள்
துபாய்:
இந்திய தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் பயிலுவதற்கு சவுதி அரேபிய அதிகாரிகள் விருப்பம்தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இருந்து ஒரு குழு, ரியாத்திற்குச் சென்று வந்ததையடுத்து, இதுதொடர்பான பல ஒப்பந்தங்களுக்கான நம்பிக்கைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன.
இக்கல்லூரியில் நடத்தப்படும் பாடங்களைப்பற்றி அறிந்து கொள்வதில் சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் அதிகஆர்வம் காட்டுகின்றனர் என்று, இந்தியக் குழுவின் தலைவர் பிரிகேடியர் தீபக் முகர்ஜி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த நாட்டிலிருந்து இக்கல்லூரியில் பயில்வதற்காக ஒரு அதிகாரியை அனுப்பி வைப்பதற்கும்சவுதி அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 84 அதிகாரிகள் இக்கல்லூரியில் பயிற்சி பெற்று வருவதாகவும், நட்பு நாடுகளைச் சேர்ந்தபல அதிகாரிகளும் இங்கு பயின்று வருவதாகவும் முகர்ஜி கூறினார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ்நாட்டு அதிகாரிகளும் இதில் அடக்கம் என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
கடந்த மே 20 முதல் 25 வரை சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இக்குழு, தற்போது துருக்கி நாட்டில்பயணம் செய்து கொண்டிருக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!