உழவர் சந்தை மூடப்படுமா? ஜெ. பரிசீலனை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

உழவர் சந்தை பிரச்னையை அரசு முறைப்படி கையாளும். இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாமுறையாக அறிவிப்பார் என்று வேளாண்மை துறை அமைச்சர் பி.சி ராமசாமி தெரிவித்தார்.

புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில், செயல்படாத உழவர்சந்தைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்துநுகர்வோர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கரூர் வருகை தந்த வேளாண்மைத் துறை அமைச்சர் பி.சி ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

அகில இந்திய அளவில் மே.21ம் தேதி விவசாயக் கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில், நான் கலந்துகொண்டு உலகமயமாக்கல் கொள்கையால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதகமான சூழ்நிலையை எடுத்துக் கூறினேன்.பச்சைத் தேயிலை விலை வீழ்ச்சியால் நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஈரியோபைடு தாக்குதல் காரணமாக தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டிலிருந்துசமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதால், உள்ளூரில் தேங்காய் விலை வீழ்ச்சியோடு எண்ணெய்விலையும் வீழ்ச்சியடைந்தது. எனவே சமையல் எண்ணெயை இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும். தேயிலைஇறக்குமதியையும் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன்.

உழவர் சந்தைப் பிரச்னையைப் பொறுத்தவரை வரும் சட்டசபைத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா தெளிவானவிளக்கத்தை அளிப்பார். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

கொப்பரைத் தேங்காய் ஊழல் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின்னர் அரசு வழங்கும் மானியம் முழுவதும் நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றடைய உரியநடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்கிறேன். அப்போது நான் காவிரி நீர்எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியும் என்பது பற்றி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என்றார் அமைச்சர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+