கே.சி.பந்த்- காஷ்மீர் தீவிரவாத அமைப்பு தலைவர் பேச்சுவார்த்தை
ஸ்ரீநகர்:
காஷ்மீரிலுள்ள ஜனநாயக விடுதலை கட்சி (டி.எப்.பி.) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஷாபீர் ஷா,கே.சி.பந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும், பேச்சு வார்த்தையிலும் ஈடுபடுவதற்கு இந்திய அரசின்சார்பில் கே.சி பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திங்கள்கிழமை காஷ்மீர் போய்ச் சேர்ந்தார். இவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக காஷ்மீர்தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜனநாயக விடுதலை கட்சியின் தலைவர் ஷாபீர்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து ஜம்மூ-காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஜம்முவில் இருக்கும் டி.எப்.பி.யின் தலைமையகத்தில்திங்கள்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கே.சி.பந்துடன் பேச்சு வார்த்தை நடத்த நான்தயாராக இருக்கிறேன். ஆனால் இது சம்பிரதாயமற்ற பேச்சு வார்த்தையாகத்தான் இருக்கும்.
நல்ல முறையில், சம்பிரதாய முறையிலான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நம்பகமான சூழ்நிலை உருவாகவேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடக்கும். பேச்சுவார்த்தை நடப்பதற்கும் ஒருஅர்த்தம் இருக்கும்.
பந்த் தனது மக்களை பார்த்து பேசப் போவதாக கூறியுள்ளார். அவர் தேசிய கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்டபலரையும் சந்தித்து பேசட்டும். என்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் நான் அவர்களுடன் பேச்சு வார்த்தைநடத்த தயாராக இருக்கிறேன். ஆனால் அதுவும் சம்பிரதாயமற்ற முறையில்தான் இருக்கும்.
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தேவையான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் அதற்கு தேவையான முயற்சியில்ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வரும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பிடித்து வைத்திருக்கும் அனைவரையும்விடுவிக்க வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் விதமான பேச்சுவார்த்தைக்குரியசரியான சூழ்நிலைக்கு வழி வகுக்கும்.
காஷ்மீரில் சண்டை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதும் கவலையளிக்கிறது என்றார்.
டி.எப்.பி. தலைமையகத்திற்கு அருகே பலத்த காவல் போடப்பட்டிருந்தது. இந்த அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள்குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது.
பந்த 7 நாள் பயணமாக காஷமீருக்கு திங்கள்கிழமை வந்தார். இவர் இந்த பயணத்தின் போது லே மற்றும் கார்கில்பகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications