சிவகாசி மாணவர் மாநிலத்திலேயே முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாநிலத்திலேயே முதல் மாணவராக சிவகாசியைச் சேர்ந்த ஏ.சி.அருண் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் 1,200 மதிப்பெண்களுக்கு 1175 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக வந்துள்ளார். இவர் சிவகாசிஎஸ்.எச்.என்.வி.மேல்நிலைப்பள்ளி மாணவர்.

இரண்டாவதாக நெய்வேலியைச் சேர்ந்த தேவிப்பிரியா 1,200 மதிப்பெண்களுக்கு 1173 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் நெய்வேலி ஜவஹர்மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவர்.

மூன்றாவதாக சென்னை முகப்பேறு வி.ஏ.வி.பள்ளியைச் சேர்ந்த லட்சுமி 1172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

முதல் 3 இடங்களையும் பெற்ற மாணவ, மாணவியர் எதிர்காலத்தில் டாக்டருக்குப் படிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலும் 2 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் பெயர்: கே.செல்லம், நெய்வேலி, கோமதி, ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டம்.

கணிதத்தில் 1321 மாணவ, மாணவியர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிற பாடங்களில் 200 க்கு 200 பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:

இயற்பியல்- 360 பேர்

வேதியல் - 292 பேர்

உயிரியல் - 35 பேர்

தாவரவியல்- 2 பேர்

விலங்கியல் - 4 பேர்

வணிகக் கணிதம்- 69 பேர்

கம்ப்யூட்டர் சயன்ஸ்- 4 பேர்

வணிகவியல் - 4 பேர்

ஆங்கிலப்பாடத்தில் சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 194 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+