காஷ்மீர்: வளைந்து கொடுக்கத் தயார்-- -- முஷாரப்
துபாய்:
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா வளைந்து கொடுக்கத் தயாராக இருந்தால் தானும்வளைந்து கொடுக்க தயராக இருப்பதாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் முஸ்லீம் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. பலஆண்டு காலமாக இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே பெரும் பிரச்சனையாக இதுஇருந்து வருகிறது.
இந்நிலையில் சென்ற வாரம் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரபை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.பாகிஸ்தானும் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் முக்கிய விஷயமாக இடம் பெறும்.
இது குறித்து துபாய் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் முஷாரப்கூறகையில் , வாஜ்பாயின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பது துணிகரமானமுடிவு.
இரு நாடுகளும் வளைந்து கொடுக்கும் மனப்பான்மையுடனும், திறந்த மனத்துடனும்பேச்சு வார்தையில் ஈடுபட்டால் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைக்கு முடிவுக்குகெண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
காஷ்மீர் பகுதியில் இருக்கும் பிரச்சனையை மனதில் கொண்டு சிறந்த ராஜதந்திரமுடிவை வாஜ்பாய் எடுத்திருக்கிறார். அவரது அழைப்பை நான் வரவேற்கிறேன்.
இந்த பேச்சு வார்த்தை குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். டெல்லியில்நடக்கும் பேச்சு வார்த்தை நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனையைதீர்க்கும் விஷயத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை காஷ்மீரில் அமைதியைஏற்படுத்துவதற்கு மிகவும் முக்கியானது.
இந்தியா பாகிஸ்தானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதற்கு, இந்தியாவில் நிலவிவரும் உள் நாட்டு சூழ்நிலையும், பத்திரிக்கைகளின் வற்புறுத்தலும், மக்களின்கருத்துமே முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.
பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவாத்தைநடத்தவது நல்ல தீர்வு என இந்தியா உணர்ந்திருப்பது மிக முக்கியமானது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications