புரசைவாக்கம் ரங்கநாதன் கைது ஏன்?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல். ஏ.வும், ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவருமான ரங்கநாதன்புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து பல புதிய தகவல்கள்வந்துள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டில் வசித்து வருபவர் ரத்தினவேலு (வயது 50). இவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றநீதிபதி சதாசிவத்தின் மகன். சென்னை திருவொற்றியூரில இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் இருக்கிறது.
ரத்தினவேலு செவ்வாய்க்கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்அடிப்படையில்தான் ரங்கநாதன் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ரத்தினவேலு தனது புகாரில் கூறியிருந்ததாவது:
சென்னை பெரம்பூர் ஜவஹர் நகரில் வசிக்கும் குப்புசாமி முதலியாரிடமிருந்து 1994ம் ஆண்டு ரு 14 லட்சம்கடனாகி வாங்கியிருந்தேன். குமார் என்பவர்தான் இந்த கடனை வாங்கிக் கொடுத்தார். இந்த கடனுக்கு நான்தொடர்ந்து வ்ட்டி கட்டி வந்தேன்.
சென்ற மார்ச் மாதம் குப்புசாமி முதலியார் ரூ 14 லட்சத்தையும் திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் என்னால்திருப்பி கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் புரசைவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதன் இந்த கடன் விஷயத்தில் தலையிட்டு, தனது உதவியாளர் கவுரிசங்கர், குப்புசாமி முதலியார் மற்றும் 10 பேருடன் கடந்த மார்ச் மாதம் 2வது வாரத்தில் என் வீட்டிற்கு வந்தார்.
வந்தவுடனேயே குப்புசாமி முதலியாருக்கு ரூ 1 கோடி கொடுக்க வேண்டுமா? என ரங்கநாதன் கேட்டார். நான் ரூ14 லட்சம்தான் கொடுக்க வேண்டும் என்றேன். அதைக் கேட்காத ரங்கநாதன் ரூ 1 கோடியில் ரூ 30 லட்சத்தைக்கழித்துக் கொண்டு ரூ 70 லட்சத்தை 1 வாரத்தில் திருப்பி தர வேண்டும் என என்னை மிரட்டிவிட்டு சென்று விட்டார்.
அதன் பின்னும் கவுரிசங்கரும் அடிக்கடி தொலைபேசி மூலமும், நேரிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்தார்.
இந்த தொந்தரவு தாங்காமல் நான் மே மாதம் 2ம் தேதி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இந்தநிலையில்தான் மே மாதம் 8ம் தேதி கவரி சங்கர் வந்து என்னை சந்தித்து நீங்கள் தர வேண்டிய ரூ 14 லட்சத்தில் ரூ10 லட்சம் மட்டும் தந்தால் போதும். ஆனால் தேர்தல் நிதியாக ரூ 3 லட்சம் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.நான் என்னிடம் பணம் இல்லை என கூறினேன்.
மறுநாள் 9ம் தேதி காலை ரங்கநாதன் தன் ஆட்களுடன் என் வீட்டிற்கு வந்து ரூ 3 லட்சம் தருகிறாயா இல்லையாஎன என்னை மிரட்டினார். தன் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து என் மார்பிற்கு குறி வைத்தார். நான் மிகவும்பயந்து போனேன். பணத்தை கொடுத்தனுப்பு என கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
மறுநாள் என் உறவினர் வீட்டு திருமண விசேஷத்துக்கு சென்றுவிட்டு, ரங்கநாதனுக்கு பயந்து திரும்பிவரவேயில்லை. சில தினங்களுக்கு முன்புதான் திரும்பினேன். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்புதரவேண்டும் என கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்பட்ையில்தான் ரங்கநாதனை போலீசார் கைது செய்துள்ளனர் இவருடன் குப்புசாமி முதலியார்,கவுரிசங்கர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ரங்கநாதன் மீது கொலை முயற்சி ( 307), கொலை மிரட்டல் (306), சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் மிரட்டல்(147,148) உள்ளிட்ட 7 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ரங்கநாதனும், கவுரிசங்கரும் மாஜிஸ்திரேட்டு முன்புஆஜர்படுதத்ப்பட்டு, மாஜிஸதிரேட்டின் உத்தரவு படி 15 நீதிமன்ற காவலில் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications