புதுவையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவாக்கம்செய்யப்பட்டது.
புதிய அமைச்சரவையில் 4 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராய் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும்செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கசாமி, சுப்ரமணியன், தமாகாவைச் சேர்ந்ததேனி.ஜெயக்குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த காசிலிங்கம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்நிவாசில் நடந்த எளிய நிகழ்ச்சியில் இவர்கள் நால்வரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே 2 முறை அமைச்சராக இருந்தவர். சுப்ரமணியம் பாண்டிச்சேரி சட்டசபைசபாநாயகராக இருந்தவர். தேனி ஜெயக்குமாரும் அமைச்சராக இருந்தவரே.
அதிமுக சார்பில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள காசிலிங்கம் சட்டசபைக்குப் புதியவர்.
பாண்டிச்சேரி சட்டசபையில் 24 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவுக்கு இடம் கிடைத்துள்ளது. 1977 ம் ஆண்டில்ராமசாமி என்பவர் அதிமுக சார்பில் பாண்டிச்சேரியில் அமைச்சராக இருந்தார். அதற்குப்பின்பு இதுவரை அதிமுக,காங்கிரஸூக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி கங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமிஉள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications