அரண்மனையில் 2 யானைத் தந்தங்கள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த 2 யானைத் தந்தந்தங்கள்அரண்மனையிலிருந்து திருட்டுப் போனது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவி பாளையம் உள்ளது. இங்குள்ள ஜமீன்பரம்பரையைச் சேர்ந்த ஒரு அரண்மனையை கோபண்ணா மன்றாடியார் என்பவர்நிர்வகித்து வருகிறார்.
இந்த அரண்மனையில் இருந்த 2 யானைத் தந்தங்கள் திருட்டுப் போய்விட்டன.அரண்மனையின் ஜன்னல் கம்பியை அறுத்து இவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
திருட்டை அறிந்த மன்றாடியார் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அரண்மனையில் பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.












Click it and Unblock the Notifications