ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்பு: பாகிஸ்தான் தடுக்காது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வழியாகச் செல்லும் ஈரான்-இந்திய எரிவாயுக் குழாய் இணைப்புக்கு பாகிஸ்தான் எந்த விதமானதடையையும் கொடுக்காது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த விதமான அரசியல் தலையீடும் இன்றி, இதற்கான ஒப்பந்தம் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புக்கும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் இடையே, வரும்ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது, இதற்கான ஒப்பந்தத்தில்கையெழுத்திடப்படும் என்று அந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
எரிவாயுவை ஈரான் விற்கிறது; இந்தியா வாங்குகிறது. ஆனால் பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய்மட்டும்தான் செல்கிறது. எனவே, இதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. பிரச்சனைகளும் எதுவும்வருவதற்கு வாய்ப்பில்லை பாகிஸ்தானின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் அமைச்சர் உஸ்மான்அமினுதீன் கூறினார்.
பாகிஸ்தான் வழியாகச் செல்லும் இந்த எரிவாயுக் குழாய்க்கு பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுந்தபாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
ஈரான் தவிர க்வடார் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்தும் இந்தியாவிற்கு பல்வேறு குழாய் இணைப்புகள்பாகிஸ்தான் வழியாகப் போடப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் நாங்கள் எந்தவிதத் தடையையும்ஏற்படுத்தவில்லை. இப்போதும் எந்தத் தடையும் இருக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications