ராணுவ தாக்குதலில் 11 விடுதலைப்புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை மட்டக்களப்பில் ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியதில் 11க்கும்மேற்பட்ட விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தெரிவிக்கையில், மட்டக்களப்பு அருகே காஞ்சிகுடிச்சரு பகுதியில் ராணுவவீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் முகாமிட்டுத் புலிகள் மறைவிடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை அதிகாலை நடந்த தாக்குதலில் 11 புலிகள் உயிரிழந்தனர். இதே போல் ராணுவ வீரர்கள் தொடர்ந்துஅக்கரப்பட்டு, பட்டுவில் பகுதிகளில் புலிகள் மறைவிடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications