ஜெ. முதல்வரானது சரியா?: 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்
டெல்லி:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளமனுக்கள் மீதான விசாரணை, 3 நீதிபதிகள் கொண்ட உயர்மட்ட விசாரணை பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஜெயலலிதா தமிழக முதல்வரானது தவறு. அவரை கவர்னர் பாத்திமா பீவி,முதல்வராகப் பதவியேற்றுக் கொள்ள அழைத்தது தவறு. அதனால் ஜெயலலிதா முதல்வரானதை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கறிஞர்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரண்டு மனுக்களும் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.எம். காத்ரி மற்றும் துரைசாமி ராஜூ ஆகியோர் கூறுகையில், வழக்கின்முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் உயர்மட்ட விசாரணை பெஞ்சுக்கு மாற்றஉத்தரவிடுகிறோம்.
இது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.
ஜெயலலிதா தமிழக முதல்வரானதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் மனோகர் லால் சர்மா மற்றும்கபூர் ஆகியோர் எந்த முகாந்திரத்தின் (லோக்கஸ் ஸ்டான்டி) அடிப்படையில் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர்என்று குறிப்பிடவில்லை.
மனுதாரர்கள் இருவருமே தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாத வெளியூர்காரர்கள்.சென்னையில் நடக்கும் ஒரு சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் கவலைப்பட என்ன காரணம்?
மனு போட்டுள்ள வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடத் தகுதியில்லாத நிலையில்அவர்கள் ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து மனுத்தாக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யும்போது அதன் அடிப்படை முகாந்திரம் (காரண காரியம்)அத்தியாவசியமாகிறது என்றனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவேவழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது,டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் இந்த மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக் கேட்டனர்.
இதையடுத்து இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர்.
முன்னதாக, டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற காரணத்தால்ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அவர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இருப்பினும் கடந்த மே 10 ம் தேதி தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ஜெயலலிதா தமிழக முதல்வராக மே 14 ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குநிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
ஜெ. முதல்வரானதை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications